ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 13.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 4. குரு பகவான்.
கால புருஷ இராசிக்கு 'பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்திற்கும்' (9ஆமிடம்)... 'சுக சயனம் என்ற 'விரய ஸ்தானத்திற்கும்' (12 ஆமிடம்)... அதிபதியாகிறார். 'குரு பகவான்'
காலம் என்ற சக்கரம் சுழலுவதே... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுதான். இந்த தர்மம்தான்... 'சூரிய பகவானையும்' (பூர்வபுண்ணிய ஸ்தானம்)... அவரின் ஆற்றலின் பிரதிபலிப்பான 'செவ்வாய் பகவானையும்' (இராசியாதிபதி)... இயக்கிக் கொண்டிருக்கிறது.
இது 'ஒரு சூரியக் குடும்பத்தைப்' பற்றிய ஆய்வு மட்டுமல்ல. அனந்த கோடி பிரமாண்டமான... பிரபஞ்சத்தில் இயங்கும்... எண்ணற்ற சூரியக் குடும்பங்களின் இயக்கத்துடனும் சம்பந்தம் பெருவதாகும். இவை அனைத்தின் இயக்கங்களும்... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.
இந்தப் புவியின் இயக்கத்திலேயே... அதன் சுற்று வட்டப் பாதை... ஏனைய கிரகங்களுக்கிடையேயான தொலைவு... இந்தப் பூமியின் பஞ்ச பூதங்களின் கட்டுக் கோப்பு... என அத்தனைக்கும் மூலமாக இருப்பது தர்மம் ஒன்றுதான்.
காலம் என்ற சக்கரம்... தர்மத்திற்கு உட்படும் போது... சுகம் என்ற 4 ஆமிடத்தில் அதீத பலம் பெற்று (4 ஆமிடத்தில் உச்ச பலம் பெறுவது)... சுகத்தை அள்ளித் தருவதும்... அளவுடன் பரிணமிக்கும் போது (9 மற்றும் 12 ஆமிடங்களில்)... தர்மத்தின் வெளிப்பாட்டில் அனைத்து பாக்கியங்களுடன் கடந்து போவதும்... அதுவே, 'கர்மம் என்ற கட்டுக்குள்' சிக்கும் போது... தர்மம் நிலைகுலைந்து போவதுமாக ( 10 ஆமிடமான கர்ம ஜீவன் ஸ்தானத்தில் நீசம் பெறுவது)... காலம்... தர்மத்தை வெளிப்படுத்துகிறது.
இதைத்தான்... கால புருஷ இராசியில்... 'குரு பகவான்' தர்மத்தை வெளிப்படுத்தும் 'ஞானவானாகத் திகழ்வதின்' மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment