ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 10
'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 1.
இந்த பூமியின் அனைத்து நிகழ்வுகளும் 'காலம், நேரம் மற்றும் இடம்' என்ற மூன்று நிலைகளை அடிப்படையாகக் கொண்டே பதிவிடப்படுகிறது.
இதில் 'இடம்' என்ற நிலையை... 'பூமியின் புவிவியல் அமைப்பு' உறுதி செய்கிறது. அது இந்த புவியின் அமைவை... ஐந்து கண்டங்களாகவும்... சமுத்திரங்களாகவும் பகுத்து அதற்கான வடிவத்தை அடைகிறது. கண்டங்கள்... நாடுகள்... அதன் உள் பிரிவான மாநிலங்கள்... நகரங்கள்... கிராமங்கள்... என எண்ணற்ற பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.
'காலம்' என்ற நிலையின் பதிவுகள்... பல நிலைகளில் வளர்ச்சியடைந்து இன்று... பொதுவாக 'ஆங்கிலேயர்கள்' பின்பற்றும் வழிமுறையான... 'காலண்டர்' என்ற பகுப்பு முறையில்... 'வருடமாக... மாதங்களாக... வாரங்களாக... நாட்களாக... கிழமைகளாக'... நடைமுறையில் பதிவு செய்யப்படுகிறது.
இது போல 'நேரம்' என்ற நிலையை... 'கடிகாரத்தின்' உதவியுடன்... 'மணி... நிமிடம்... விநாடி...' என்ற முறையில் பதிவு செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது.
காலங்களுகெல்லாம் முந்தையதாகவும்... அப்பாற்பட்டதாகவும்... 'அனாதி' (காலவறைகளுக்கு உட்படாதது ) என்று வரையறுக்கப்படும்... 'வேதங்களின்' ஒரு பகுதியாக இருக்கும் 'ஜோதிடக் கலை'... இந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்பேயே... 'இந்த காலம்... நேரம்... இடம்...' என்ற நிலைகளை... நமது பூர்வ ரிஷிகள்... தமது 'அந்தர் ஞானம்'... என்ற உள் நோக்குப் பார்வையால்... அறிந்து, அவற்றில் 'இடம்' என்ற நிலையை அன்றைய புவியல் அமைப்புடனும்... 'காலம் மற்றும் நேரத்தை... 'நாள்... நட்சத்திரம்... திதி... கரணம்... யோகம்' என்ற... ஐந்து நிலைகளை மூலமாகக் கொண்டு... 'பஞ்சாங்கம்' என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பின் மூலம்... என்றென்றும் அழியாத ஒரு 'தொடர் பதிவுக்கான' வித்தாக புவி வாழ் மாந்தருக்கு அளித்திருக்கிறார்கள்.
ஜோதிடக் கலை... இந்த 'கால... நேர... இட...' வரையரைகளை 'ஜோதிடச் சித்திரத்தின்' மூலமே வரையறுத்திருக்கிறது. அதன் பரிணாமமே... இன்று ஒவ்வொரு ஜீவனின் கைகளிலும்... அது ஒரு 'ஜோதிடச் சித்திரமாக' வடிவம் பெறுகிறது. அது... அந்த சித்திரத்தில்... அந்த ஜீவன் 'பிறந்த நேரத்தின்... இடத்தின்...' அடிப்படையில்... அன்றைய பிரபஞ்ச கிரக சுழற்சிகளை பதிவிடுகிறது. 'காலத்தை'... 'சந்திர பகவான்' கடக்கும்... 'நட்சத்திரத்தின் சாரமான'... கிரகத்தின் வழியாகக் கணித்து... அதை 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பாக'... வருடம், மாதம், நாள், மணி, நாழிகை, விநாடி... என ஒரு துல்லிய கணிப்புக்குள் அடக்குகிறது.
காலம்... 'கடந்ததாகவும், நிகழ்வதாகவும், வருவதாகவும்' இருக்கிறது. அதை ஒரு வடிவத்துள் அடக்கியதில்தான்... ஜோதிடக் கலையின் பெருமை அடங்கியிருக்கிறது. ஜோதிடச் சித்திரத்தில்... பன்னிரு இராசிகளாக... பகுக்கப்பட்டிருக்கும் இராசிகளில்... முதல் இராசியான... 'மேஷ இராசி' காலத்தைக் குறிக்கும்... 'கால புருஷனின்'... 'இராசியாக' வகுக்கப் பட்டிருக்கிறது.
இந்த 'மேஷ இராசியை' மூலமாகக் கொண்டு... இனி காலத்தையும்... அதன் வழியிலான ஜீவனின் பயணத்தின் சூட்சுமத்தையும்... படிப்படியாகப் பார்ப்போம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment