தாயமும் - தாய விளையாட்டின் சூட்சுமமும் :
நமது பாரம்பரிய விளையாட்டுகளில் தலையானது. இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடும் ஆட்டம்தான் இது.
இந்த சித்திரத்தை தரையில் வரைந்து... கற்களைக் காய்களாகவும்... ஒரு புறம் தேய்க்கப்பட்ட புளியங்கொட்டைகளைத் தாயக்கட்டைகளாகவும் கொண்டு... கிராமத்து மக்கள்... தங்களது கிராமத்து பொது இடங்களில்... பொழுதுபோக்காக விளையாடக்கூடிய... மிக எளிமையான விளையாட்டு.
இந்த ஆட்டம்... ஆறு காய்களை மூலமாகக் கொண்டு... தாயக் கட்டைகளை உருட்டி... தன் முறை வரும் போது... 'தாயம்' விழுந்ததும்... ஒவ்வொரு காயாக ஆரம்பித்து... இடது புறம் ஆரம்பித்து வலது புறத்தை நோக்கி காயை நகர்த்துவதுதான் விளையாட்டு முறை.
ஒவ்வொரு முறையும் தாயக்கட்டைகளை உருட்டி... அதில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப... காய்களை நகர்த்த வேண்டும். காய்களை ஒன்றாகவோ அல்லது இரண்டு மற்றும் மூன்றாகவோ நகர்த்தலாம். ஏனைய ஆட்டக்காரர்களின் 'வெட்டுக்கு' தப்பிக்க... 'மலைகள்' என்று குறிப்பிடும் இடங்களில் 'ஓய்வு' எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த ஆட்டத்தின் வெற்றி... அந்த ஆறு 'காய்களையும்' எவரொருவர்... முதலாவதாகக் கொண்டு சென்று 'பழங்களாக' மாற்றுகிறார் என்பதைப் பொறுத்ததே. அதற்காக எடுக்கும் முயற்சியும்... அதில் ஏற்படும் தடைகளும்... அந்தத் தடைகளைத் தாண்டி... எவ்வாறு வெற்றி அடையப்படுகிறது என்பதே... இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யம்.
இந்த ஆட்டத்திற்குள் இருக்கும் சூட்சுமம்... இந்த விளையாட்டிற்குள்... நமது 'வாழ்க்கைச் சுழல்' என்ற... தொடர் விளையாட்டின் சூட்சுமம் அடங்கியிருப்பதுதான்.
'பிறவி' என்பது மிகவும் கடுமையான போராட்டம்தான். அதைத் தவிர்த்துவிடுவதற்கான போரட்டத்தைத்தான்... ஒரு ஜீவன் இந்தப் பிறவியில் எதிர்கொள்கிறது. ஆனால்... ஜீவன், இந்த பிறவிப் பந்தயத்தில்... தவிர்க்கவே முடியாத சூழலால்... கலந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. 'தாயம்' விழாதவரை தப்பித்துக் கொள்ளும் ஜீவன்... 'தாய விளையாட்டின் சுவரஸ்யம் போல'... தாயத்தை விழ வைத்து... இந்த 'தாய விளையாட்டு'... என்ற பிறவிச் சுழல் விளையாட்டை ஆரம்பித்து வைத்து விடுகிறான்... படைப்பாளன்.
தவிர்க்க முடியாது... இந்தப் 'பிறவி விளையாட்டை' ஆரம்பிக்கும் ஜீவனுக்குத்தான்... எத்தனை சோதனைகள்...! 'தாயக் கட்டைகளை' உருட்டி விழும் எண்ணிக்கைகளைப் போன்றதுதான்... நமது'கர்ம வினைகள்' அளிக்கும்... 'இன்ப - துன்ப நிகழ்வுகள்'. அதற்கேற்ப இந்த ஜீவன் தன் வாழ்வு நிலைகளைக் கடக்கிறது.
சில நேரம்...இன்பமாக 'ஓய்வை ' எடுத்துக் கொள்கிறது. சில நேரம்... வாழ்வின் சூழல்களுக்கு ஏற்ப... 'தனியாகவோ... துணையுடனோ...' தனது 'கர்ம வினைகள்' என்ற 'சுமையைச்' சுமந்து கொண்டு செல்கிறது. அதன் 'இலக்கு'... தனக்குண்டான 'கர்ம வினைகளை' தர்மத்துடன் அணுகி... கடமைகளை பூரணமாக்கி... மிண்டும் பிறவி என்ற நிலையை அடையாமல்... 'காய்... பழமாவது போல' ... 'பிறவியற்ற பெரும் பேற்றை' அடைவதுதான்.
தாயம் என்ற எளிய விளையாட்டு... வாழ்வு என்ற மிகக் கடினமான விளையாட்டுக்கான பயிற்சி என்றால்... அது மிகையல்ல.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment