ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 7 :
தர்ம - கர்மாதிபதி யோகத்தின் சூட்சுமம் :
'தர்மம்' என்ற சொல் உணர்த்தும் பொருள்... சத்தியம் என்பதுதான். எது, எக்காலத்திற்கும் உண்மையாக இருக்குமோ... எது, எல்லோருக்கும் பொதுவானதோ...அதுதான் தர்மம்.
இந்த தர்மத்தை... யுகம் யுகமாக... எவ்வித பாரபட்சமும் இல்லாமல்... நிலைநிறுத்தி வருகிறார்... படைப்பாளர். அதன் வழியேதான்... தமது படைப்புகளையும் வழிநடத்துகிறார்.
வேதங்கள் குறிப்பிடும்... 84 லட்சங்கள் உயிரினங்களில்... மனிதப் பிறவி நீங்களாக... மிகுதி அனைத்து உயிரினங்களையும்... உணவு... உறக்கம்... உறவுப்பெருக்கம்... என்ற பொதுவான அம்சங்கள் அடங்கிய வாழ்வு நிலைக்குள் அடக்கிவிடுகிறார். அதனால்... இந்த அனைத்து உயிரினங்களும்... அவற்றின் தர்மத்தினான வாழ்வை... ஒரு போதும் மீறுவதில்லை.
மனிதப் பிறவிக்கு மட்டும்... ஒரு பிரத்தியோக வாய்ப்பை... இறைவன் வழங்கியிருக்கிறார். அது... 'தானே முடிவெடுக்கும் ஒரு வாய்ப்புதான்'. அந்த வாய்ப்பை... பிரிதொரு உயிரினத்திற்கு வழங்காது... மனிதப் பிறவிக்கு மட்டும் வழங்கியிருப்பதற்கான நோக்கமே... மனிதன்... தனக்கு முன்னால் உள்ள சூழலுக்கு ஏற்ப... தனது அறிவை மூலமாகக் கொண்டு... தர்மத்தின் அடிப்படையிலான... முடிவையே எடுப்பான்... என்ற நம்பிக்கையிலேயே...!
ஆனால்... இந்த வாய்ப்பு... ஒரு வரமாக இல்லாமல் சாபமாகிப் போனதுதான்... 'கர்மம்' என்ற தொகுப்பின் ஆரம்பமாக அமைந்தது. உலக இச்சைகளினாலும்... ஆசா பாசங்களினாலும்... மனிதன் தனது சுய நலன் கருதி... எடுத்த முடிவுகளின் விளைவுகளே... 'தர்மத்தின் பிறல்களுக்கு' காரணமாக அமைந்தது. அந்தக் காரணங்களே... அந்த ஜீவனின் அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமான... 'கர்மத்தின் தொகுப்பாக' மாறிப் போனது.
இவ்வாறு, தொடர்ந்து... ஜனனம்... மரணம் என்ற தொடர் பிறவி என்ற பிணிக்குள் சிக்கிக் கொண்ட ஜீவனை மீட்பதற்கு... மீண்டும் தர்மத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டிய அவசியம் படைப்பாளருக்கு ஏற்படுகிறது. அதனால்... 'கர்மம் என்ற தொகுப்பை முற்றிலும் கரைத்துவிடும் தன்மை'... இந்த தர்மத்திற்கு மட்டுமே உண்டு... என்ற உண்மையை... ஜீவனுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது.
இதை சூட்சுமமாக... ஜோதிடம் என்ற கலை உணர்த்துகிறது. ஜோதிடக் கலையின் மூலமான ஜோதிடச் சித்திரம்... கால புருஷ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் 'மேஷம்' என்ற இராசி... கால புருஷனின் லக்னமாகிறது. அந்த லக்னத்திலிருந்து 9 ஆமிடமான 'தனுர் இராசி'... 'தர்ம ஸ்தானமாக' அமைகிறது. 10 ஆமிடமான 'மகர இராசி'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது.
தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக 'குரு பகவான்' அமைந்திருக்கிறார். அவர் ஞானத்திற்குக் காரகமாகிறார். அந்த ஞானம்தான்... இந்த ஜீவனை... தான் எதிர் கொள்ளும் நிலைகளுக்கு ஏற்ப... தர்மத்தை மூலமாகக் கொண்டு... முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது.
கர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக 'சனி பகவான்' அமைந்திருக்கிறார். அவர் அந்த ஜீவனின் வாழ்விற்கான காலமான... 'ஆயுளுக்குக்' காரகத்துவத்தை வகிக்கிறார். அவர்தான்... ஜீவனின்... ஜீவத்துவத்திற்கும் காரகனாகிறார்.
அந்த ஜீவத்துவத்தில்தான்... அந்த ஜீவன்... தனக்குண்டான கடமைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த கடைமகளை எதிர் கொள்ளும் போது... அதை தர்மத்துடன் எதிர் கொள்ளும் வண்ணம்தான்... 'கர்மம்' என்ற ஸ்தானத்திற்கு முன்... 'தர்மம்' என்ற ஸ்தானத்தை அமைத்திருக்கிறது... ஜோதிடம் என்ற அரும் கலை.
இதை உணர்த்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான்... இவ்விரண்டு நிலைகளின் சேர்க்கையான... 'தர்ம - கர்மாதிபதிகளின்' இணைவான யோகம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment