நால்வர் :
'திருஞான சம்பந்தர்... திருநாவுக்கரசர்... சுந்தர மூர்த்தி நாயனார்... மாணிக்க வாசகர்...' என்ற இந்த நால்வரை முன்னிருத்தி, அறுபத்து மூவரான நாயன்மார்களின் பட்டியல் 'சிவ தரிசனத்தை' அருள்கிறது.
இவர்கள் ஒவ்வொருவரையும்... ஒவ்வொரு சூழலைக் கொண்டு இறைவன் ஆட்கொண்டிருக்கிறான்.
'திருஞான சம்பந்தரின்' பெயரிலேயே... இந்த 'ஞானத்திற்கான சம்பந்தம்' இருப்பதை அறியலாம். அந்த குழந்தையை ஆட்கொள்ள ஒரு நிறைவான நாளைத் தேர்ந்தெடுக்கும் சர்வேஸ்வரன்... நிரிலே மூழ்கிக் குளிக்கும் தந்தையைக் காணாமல் அழும் குழந்தைக்கு... பாலமுது கொடுக்க தேவியை அனுப்புகிறான். அதுவரை உலகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்த குழந்தை... இப்போது உள்ளுணர்வாய் இருக்கும் ஈஸ்வரனிடம் சம்பந்தம் வைத்துக் கொள்கிறது. அந்த சம்பந்தம்... 'திரு ஞான சம்பந்தமாக' மலர்கிறது.
இறை தொண்டுக்கு ஒரு பேருதாரணமானவரே... 'திருநாவுக்கரசர்'. உழவாரப் பணியே இவரின் தொண்டு. எந்தவித பிரதிபலனும் இல்லாது... இந்தத் தொண்டு புரியும் இவரை ஆட்கொள்ளும் சர்வேஸ்வரன்... இவரை அரசனாக்குகிறார். தூய எண்ணமே... வார்த்தைகளாகிறது. அர்த்தம் பொதிந்த வார்த்தைகளே... செயல்களாக மலர்கிறது. அந்த வார்த்தைகளின் அடுக்கிற்கு ஆதரமான நாவை... ஆளும் அரசனாக... இந்த அடியவரை மாற்றும் ஈசன்... இவரை... 'திருநாவுக்கரசராக' உயர்த்தியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது...!
தனது பிம்பத்தை ஒரு முறை பார்த்து வியந்த சர்வேஸ்வரன்... அந்த பிம்பத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சுந்தரமான பிம்பம் உயிரோவியமானது. இந்த உயிரோவியம்... தனது பாதையிலேயே... இந்த உலகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தது... சர்வேஸ்வரன் இடைபடும் வரை. அவரின் இடைபடுதல் நிகழ்ந்த இடமோ... ஒரு ஆலயம். சூழலோ... இந்த பெருமகனாரின் திருமண வேளை... அப்போது ஒரு திருவிளையாடலை நிகழ்த்தி இவரை ஆட்கொண்டு... சுந்தரரை... மூர்த்தியுடன் இணைத்துக் கொண்டு... நாயனாராக உயர்த்திவிட்டார்... ஈசன்.
நவரத்தினங்களிலேயே உயர்ந்த ரத்தினமான... மாணிக்கத்தை, ஒரு மனிதரிடமிருந்து... வரும் வார்த்தைக்கு ஒப்பீடாக வைத்தால்... அதைத்தான் ஈசன் அருளினார். இந்த மாணிக்கம்... அன்றைய நாளில் வீறுகொண்டிருந்த சமண மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது. அவரவருக்கு உரிய மார்க்கத்திலேயே... அவரவர் பயணம் செய்து உய்ய வேண்டும் என்பதுதான் வழிமுறை. அதற்காக அவரின் தமக்கையார் ஈசனிடம் பிரார்த்திக்க... தக்க தருணத்தில்... அவருக்கு ஒரு உடல் உபாதையைக் கொடுத்து... தன்னிடம் ஈர்த்துக் கொண்டான் ஈசன். தன் முன் அமர்ந்து... அடியெடுத்துக் கொடுத்து... அவரைப் பாடவைத்ததன் விளைவால்... நமக்குக் கிடைத்த மாணிக்கம்தான் 'சிவபுராணம்'. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி...' என்றும்... 'சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை... முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்...' என்று அருளும் 'மாணிக்க வாசகரின்'... வாசகத்திற்கு ஈடு... இணைதான் ஏது உண்டு இந்த அவனியில்...!
ஸாய்ராம்.

No comments:
Post a Comment