மனம் என்பது என்ன... பகுதி - 3 :
நாம் உருவாக்கிக் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்பவும் இந்த மனம் செயல்படுவதுதான் ஆச்சரியம். இந்த விளைவுக்கு... நம் எதிர்பார்ப்புகளே காரணமாக அமைந்து விடுகிறது. எந்த ஒரு சிறு எதிர்பார்ப்பும்... மகிழ்ச்சியையும்... ஏமாற்றத்தையும்... தந்து விடும் அளவிற்கு ஆபத்தானதுதான்.
புத்தர் பெருமானாரிடம், அவரது அத்யந்த சிஷ்யர் ஒருவர்... ' சுவாமி...! மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது...?' என்ற கேள்வியை வைத்தார். சிறிது மௌனம் காத்த புத்தர்... 'அந்தக் காரணத்தைத் தக்கத் தருணத்தில் உனக்கு அனுபவமாகக் காட்டுகிறேன்...' என்று பகிர்ந்தார்.
ஒரு முறை தனது சஞ்சாரத்தின் போது... புத்தர் தன்னிடம் இருந்த ஒரே விலைமதிப்பான... அக்ஷயபாத்திரத்தை... அந்த அத்யந்த சிஷ்யனிடம் கொடுத்து... 'இதை கொஞ்ச நேரம் வைத்திரு...!' என்று கூறினார். அதைப் பெற்றுக் கொண்டு தனது கைகளில் பத்திரமாக வைத்துக் கொண்டான் சிஷ்யன். சிறிது நேரப் பயணத்திற்குப் பின்... புத்தர், 'அந்தப் பாத்திரத்தைக் கொடு...!' என்றதும்... சிஷ்யன் உடனடியாகப் பணிவுடன் அந்தப் பாத்திரத்தை... புத்தரிடம் திருப்பிக் கொடுத்தான்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் புத்தர்... சிஷ்யனிடம், ' இதை வைத்துக் கொள்...!' என்று கூறி அக்ஷய பாத்திரத்தை அளிக்க... மிகவும் மனம் மகிழ்ச்சியுடன்... தனது இருகரங்களையும் நீட்டி... அந்தப் பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டு... அதைத் தன் சோலிக்குள் வைத்து முடிந்து கொண்டான். முன்னெப்போதும் இல்லாத சந்தோஷம் அவனைத் தொற்றிக் கொண்டது.
பயணத்தைத் தொடர்ந்த புத்தர்... மீண்டும் சிஷ்யனிடம்...'அந்தப் பாத்திரத்தைக் கொடு...!' என்று கூறியதும்... திகைத்துப் போன சிஷ்யனின் முகத்தில் அதுவரை நிலவி வந்த மகிழ்வு நீங்கி... சோகம் கவ்விக் கொண்டது. மிக மெதுவாக தனது சோலியை அவிழ்த்து... அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்து... குனிந்த தலையுடன்... புத்தர் பெருமானாரின் கைகளில் கொடுத்தான்.
அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக் கொண்ட புத்தர் பெருமானார்... சிஷ்யனிடம்... 'அன்று ஒரு கேள்வி கேட்டாயே... ஞாபகமிருக்கிறதா...? மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது... என்று... இதுதான் காரணம்...' என்று புன்னகையுடன் பதிலளித்தார். ஏதும் புரியாமல்... திகைத்து நின்ற சிஷ்யனுக்கு புத்தர் அளித்த உபதேசம்தான்... நமக்கும்.
'முதலில் அந்தப் பாத்திரத்தைக் கொடுக்கும் போது... 'இதை கொஞ்ச நேரம் வைத்திரு...!' என்று கூறினேன். அப்போது நீ... இந்தப் பாத்திரம் நமது குருவினுடையது... அதைப் பத்திரமாக வைத்திருந்து ... குரு கேட்கும் போது கொடுக்க வேண்டும்... என்று உனது மனத்தில் ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டாய். நான் கேட்கும் போது... மிக மகிழ்வுடனும்... பணிவுடனும்... அதை ஒரு சேவையாகக் கருதி... என்னிடம் உடனடியாகத் திருப்பிக் கொடுத்தாய்.'
'இரண்டாவது முறை நான் அந்தப் பாத்திரத்தைக் கொடுக்கும் போது... ' இதை வைத்துக் கொள்...!' என்று நான் கூற... நீ இந்தப் பாத்திரத்தை குரு நமக்கே கொடுத்துவிட்டார்... அதை நான் பத்திரமாக... குருவின் நினைவாக... என்றும் வைத்துக் கொள்வேன்... என்று, உனது மனதில் ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டாய். அதனால்தான் நான் கேட்கும் போது... உனக்கு ஒரு அதிர்ச்சியும்... சோகமும் உண்டாகி... மிகத் தாமதமாகவும்... வேண்டா வெறுப்புடனும்... அதை என்னிடம் திருப்பிக் கொடுத்தாய்.'
'பார்த்தாயா...! நீ வளர்த்த எண்ணங்களே... உனக்கு முதலில் மகிழ்ச்சியையும், பின்னர் சோகத்தையும் கொடுத்தது. மனதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளே... நமக்கு இன்பத்தையும்... துன்பத்தையும் தருகின்றன. இதுதான்... நீ அன்று, ' மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது...?' என்று... என்னடம் கேட்ட கேள்விக்கான பதில்.'
அந்த சிஷ்யனுக்கு புத்தர் அருளிய ஞான அனுபவம்... நம் எல்லோருக்குமானதுதான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment