குரு தேடல் - பகுதி 1
நரேந்திரன்... கல்கத்தா நகரில், இரண்டடுக்கு மாளிகையில், பிறந்ததிலிருந்தே சுகமான வாழ்வு வாழ்ந்து வந்த சிறுவன். நேர்மையான வழக்குரைஞரான தந்தை... நன்கு படித்த... ஆன்மீகத்தில் திளைத்த தாயார்... சிறந்த பள்ளியில் கல்வி... சென்று வர சாரட் வண்டி... என வாழ்ந்து வந்த நரேந்திரனின் வாழ்வில் புயல் வீசியது.
தந்தையின் திடீர் மறைவு, நரேந்திரனின் வாழ்வையே புரட்டிப் போட்டது. நேர்மையே துணை என வாழ்ந்த தந்தை... நல்ல பெயரைச் சம்பாதித்தாரே தவிர பொருளையல்ல. கையில் இருக்கும் சொற்பத்தை வைத்து தாயார் குடும்பத்தை நடத்தி வந்தார். கல்லூரியில் முதல் ஆண்டின் இறுதியில் இருந்த நரேந்திரனுக்கு... குடும்பத்தின் சூழல புரிய ஆரம்பித்தது.
சாரட் வண்டிப் பயணம்... நடை பயணமானது. குடும்பச் செலவுக்கு தாயார் அவ்வப்போது கடன் பெரும் சூழலுக்கும் தள்ளப்பட்டார். மிஞ்சியிருந்த வீட்டின் மீதும்... பங்காளிகளின் பார்வை திரும்பியது. அதைத் தக்க வைத்துக் கொள்ள நிதிமன்றம் செல்லும் சூழலும் ஏற்பட்டது.
வாழ்வு என்பது இப்படியும் மாறிப் போவதா...? என்ற கேள்வி... நரேந்திரனின் மனதில் எழுந்து... இந்தத் துன்பத்திலிருந்து விடுபட... சாதாரண மனிதர்களைப் போல... நரேந்திரனின் மனமும்... தேடலில் ஈடுபட்டடது. அந்தத் தேடல் ஜோதிடம்... ஆருடம்... என மாறி... மாறி... இறுதியில் இறைவனின் திருவடியில் கொண்டு வந்து சேர்த்தது.
நரேந்திரனின் வாழ்வில் இந்த சூறாவளியை ஏற்படுத்தியது... கர்ம வினையா...? அல்லது இறைவன் தன் பக்தனை ஆட்கொள்ள நடத்தும்... திருவிளையாடலா...?
இறைவனின் கருணை... நரேந்திரனை தக்க குருவுடன் சேர்க்க கனிந்தது. அந்தக் குரு தேடல் பயணத்தில்... கல்கத்தாவில் இருந்த எண்ணற்ற குருமார்களை நரேந்திரன் சந்திக்க நேர்ந்தது. எல்லா குருமார்களிடமும்... நரேந்திரன் கேட்ட கேள்வி ஒன்றுதான்... ' இறைவன் இருக்கின்றானா...?'... 'அவனை... நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா... அவரை எனக்குக் காட்ட முடியுமா...?'
இந்த நேரடியான கேள்விக்கான பதில்... எங்கும் கிடைக்காத சூழலில்தான்... நரேந்திரனின் நண்பன் ஒருவன்... 'உனது கேள்விக்கு பதிலளிக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் காளி கோவிலின் பூஜாரி... காளி மாதாவிடம் எப்போதும் முகம் மலர பேசிக் கொண்டிருப்பவர்... வா, அவரிடம் செல்லலாம்...' என்ற போதும்... நம்பிக்கையின்றியே... நரேந்திரன்... நண்பனுடன்... அந்த பூஜாரியைச் சந்திப்பதற்காகச் சென்றான்.
இந்த சந்திப்புதான்... இறைவனின் திருவருள்... காளி மாதாவின் அருள் கருணை. தான் சந்திக்கப் போவது யாரை... என்பதைக் கூட அறியாத நிலையில்தான்... நரேந்திரனின் பயணம் இருந்தது. ஆனால் அந்த பூஜாரியாரோ... இந்த பக்தனுக்காகத்தான் இத்தனைக் காலமாகக் காத்துக் கொண்டிருந்தார்... அவரது... கனிந்த பக்தி... திரண்டிருந்த தவம்... எல்லையில்லாத அன்பு... இவையெல்லாவற்றையும் அள்ளி... அள்ளித்தரக் காத்துக் கொண்டிருந்தார்.
இதையேதுமறியாத நரேந்திரன்... சந்தேகங் கொண்ட மனதினனாய்... அந்த மகானின் முன் சென்று நின்றார். அதுவரை... கண்களை மூடியபடி நிஷ்டையில் இருந்த அந்த மகான்... தனது கண்களைத் திறந்து...' வா, என் அன்பு மகனே நரேந்திரா... உனக்காகத்தான் நான் இவ்வளவு நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்...!' என்று கூறியதும்... நரேந்திரனின் முதுகெழும்பு சில்லிட்டது. உடல் சிலிர்க்க... மயிர்க் கூச்செரிய... கண்களில் வழிந்த நீருடன்... அந்த மகானின் திருவடியில்... தானாக வீழ்ந்து வணங்கினான்.
கண்களில் நீர்வழிய... தனக்கு முன்னால் கருணையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்... அந்தக் கண்களை விட்டுத் தன் கண்கள் அகலாமல் இருப்பதை உணர்ந்தான். இதுவரை அல்லல் பட்டுக் கொண்டிருந்த தனது வாழ்விலிருந்து... விடுதலையடைந்த உணர்வைப் பெற்றான். கடலலையைப் போல கொந்தளிப்பாக இருந்த தனது மனம்... இந்த மகானின் சான்னியத்தில்... ஆழ்ந்து அமைதியானதை உணர்ந்தான்.
தனக்கு முன்னால் இருக்கும் அந்த மகான்... 'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்' என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டான். இந்த சத்குருதான் தன்னை காந்தமென இங்கு இழுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்தான். தொடர்ந்த மௌனத்தை... பர்மஹம்ஸரே கலைத்தார்...'நரேந்திரா... உன்னிடம் இருக்கும் கேள்விகளைக் கேட்கலாமே...!' என்ற போதுதான்... நினைவலைகளில் இருந்து விடுபட்டு நிதர்சன உலகிற்கு வந்தான் நரேந்திரன்.
இதுவரை... வெறும் கேள்வியாக இருந்தது... இப்போதுதான்... தேடலாக மாறியது... மிகவும் பவ்யத்துடன்... தனது சத்குருவை நோக்கி... 'சுவாமி... இறைவன் இருக்கிறாரா...?... அவரை நீங்கள் கண்டதுண்டா...? அவரை எனக்குக் காட்ட முடியுமா...?' என்று பணிவுடன் கேட்க... புன்முருவலுடன் பகவான்... பதிலளித்தார்... 'இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரை நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரோடுதான் நான் வாழ்கிறேன்... அவரை உனக்கும் காட்டுகிறேன்... வா..!' என்ற போதுதான்... நரேந்திரனின் தேடல் ஒரு முடிவுக்கு வந்தது. நரேந்திரன்... 'சுவாமி விவேகானந்தனாக' மாறிய அற்புதமும் நிகழ்ந்தது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment