திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 3 :
தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்
... என்ற அறம் கூறும் குறலுக்கு பொதுவாக...தம் மைந்தர்களே தமக்குப் பொருளாவார்கள் என்றும்... அந்த மக்களின் வழியே வரும் நல்வினைகளின் பொருள்கள் தாமாக தம்மை வந்து அடையுமென்று அமையும்.
ஆனால் வள்ளுவப் பெருந்தகை இந்த இரண்டு அடிகளில்... கர்ம வினைகளின் கட்டமைப்பை சூட்சுமமாக விவரிக்கிறார். இந்தக் குறளின் சூட்சுமம் 'தம்தம்' என்ற சொல்லாடலில் மறைந்திருக்கிறது. 'தம்' என்ற ஒரு சொல்லே...
தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள்
தம் வினையான் வரும்
... பொதுவான அர்த்தத்தை விவரிக்கப் போதுமானது. ஆனால் இந்த சொல்லை இருமுறை இணைத்து 'தம்தம்' என்று பயன்படுத்தும் போதுதான்... அதில் கர்ம வினைகள் என்ற தேவ ரகசியத்தை பொதித்து வைக்கிறார்.
ஒவ்வொரு ஜீவனும் அதனதன் கர்மவினைகள அனுபவிக்க பிறவி எடுக்கிறது. அந்த கர்ம வினைகளின் விளைவுக்கு ஏற்பவே... இந்த வாழ்வில் தொடர்புகளும் ஏற்படுகிறது. அந்த தொடர்புகளாக தாய்... தந்தை... புத்திரம்... பௌத்திரம் என அமைவுகளும் ஏற்படுகிறது. நம்மோடு தொடர்பு பெறும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இதே போல கர்ம வினைச் சூழல்கள்தான் அமைந்திருக்கும்.
எனவே ஒருவருக்கு இந்தப் பிறவியில் அமையும் உறவான மக்கட்பேறு... அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்பவும்... அந்த மக்கட்பேறுவின் தொடர்பும் அதனதன் கர்ம வினைகளுக்கு ஏற்பவுமே அமைகிறது. இந்த ரகசியத்தைத்தான்... 'தம்தம்' என்ற சொல்லால் உணர்த்துகிறார் இந்த வார்த்தை சித்தர்.
இந்த ரகசியம் புரியும் போது, 'எனது மக்களின் பிறப்புக்கு எனது கர்மவினைகள்தான் காரணம்'... என்று பெற்றோரும்... 'இந்தக் குடும்பத்திற்குள்ளான எனது பிறப்புக்குக் காரணம் எனது பூர்வ வினைகளே'... என்று குழந்தைகளும் உணர்ந்து கொள்ளும்.
இந்தக் குறளில் வரும் 'பொருள்' என்ற சொல்லுக்கு 'வினைகளின் விளைவுகள்'... என்ற பொருளாக மலரும்.
இந்த சூட்சுமத்தை உணரவைத்து... தமது வினையின் விளைவுகள்தான் தமது மக்கட் பேறு... அவர்களின் வினைகளின் விளைவுகள்தான் தத்தமது குழந்தைகளால் அனுபவிக்கும் அனுபவமென்ற... பிறவி ரகசியத்தை இந்தக் குறளில் அமைத்திருக்கிறார்... இந்த ஞானச் செம்மல்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment