ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 1. திருபாணாழ்வார்.
இவர் ஒரு முறையேனும் திருவரங்கனை தரிசித்ததில்லை. ஆனாலும் இவருக்கு அரங்கன் மேல் ஆற்றவொண்ணா காதல். இந்த அன்புதான் அவரை அன்றாடம் திருவரங்கத்திற்கு ஈர்த்தது.
ஆலயத்திற்குள் பிரவேசிக்க அன்பும்... பக்தியும்... மட்டும் போதாது, அதற்கான வர்ணமும் தேவையான காலமாக அன்றைய சூழல் இருந்தது. அதற்காக கலங்காமல் இவர் அம்மாமண்டபம், காவேரிக் கரையோரம் வந்து காலையிலேயே அமர்ந்துவிடுவார். கையில் தம்பூரா... மனதில் அரங்கனின் தரிசனம்... வாயிலோ அரங்கனின் திருநாமம்... என அவரின் வாழ்நாட்கள் கடந்தன. அவரின் அன்புக்கும்... பக்திக்கும் மனமிரங்கிய அரங்கன் அன்றைய நாளில்... அந்த எளிய பக்தனுக்கு தன் இன்னருளைக் காட்ட எண்ணினான்.
அரங்கனின் திருமஞ்சனத்திற்கு அன்றாடம் அம்மாமண்டபக் காவேரிக் கரைக்கு நீர் எடுக்க வரும் பட்டரின் வழியில் இந்த பக்தர் அமர்ந்து... கண்மூடி அரங்கனின் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை விலகச் செய்வதற்காக... ஒரு சிறு கல்லை எடுத்து, பட்டர் அவர் மீது வீசினார். அது அவரின் நெற்றியில் சென்று பட்டுவிட... கண்விழித்த பக்தர் சூழலைப் புரிந்து கொண்டு... தன் வலியைக் கூட பொருட்படுத்தாமல்... அரங்கனின் தொண்டுக்குத் தான் இடையூராக இருந்துவிட்டோமே என்ற வருத்தத்தில்... வலிந்து, வலிந்து பட்டரிடம் மன்னிப்பைக் கோரினார்.
சற்று நேரத்திற்கெல்லாம்... திருமஞ்சனத்திற்கான நீர் கருவரையின் வாயிலைச் சென்று அடைந்தது. அங்குதான் தனது லீலையை ஆரம்பித்தான் திருவரங்க இன்னமுதன். கருவறையின் கதவுகளை இறுக மூடிக் கொண்டான். என்ன முயற்சி செய்தாலும் திறக்க முடியவில்லை என்னும் நிலையில்... தலைமைப் பட்டர், ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கலாம் என்று உணர்ந்து... அரங்கனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார். அரங்கனின் பதில் அசரீரியாக கருவறை உள்ளே இருந்து வந்தது.
'எனது அந்தரங்க பக்தனை காயப்படுத்தி எடுத்த வந்த இந்த நீர் எனது திருமஞனத்திற்கு உகந்ததல்ல...!' என்ற அரங்கனின் கூற்றைக் கேட்ட பட்டர்... 'சுவாமி...! நான் தவறு செய்துவிட்டேன்... என்னை மன்னித்தருளுங்கள்...!' என்று கண்ணீருடன் மன்றாடினார். 'அந்த பக்தனை உமது தோளில் சுமந்து கொண்டு வந்து எனது திருவடியில்... சேர்த்துவிடு...!' என்பதுதான் அரங்கனின் ஆணையாக அமைந்தது.
அரங்கனின் ஆணைக்கு இணங்கி... காவேரிக் கரைக்குச் சென்ற பட்டர்... இரத்தம் வடிந்து காய்ந்த நெற்றியுடன், கண்மூடி தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை வலிந்து... தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு... அரங்கனின் திருவாயிலில் வந்து நிற்க... கருவறையின் கதவுகள் தாமாகத் திறந்தன.
அப்போதுதான் கண்விழித்த பக்தர்... சூழ்நிலையின் விழிப்புணர்வுக்கு வந்து... தான் காண்பது கனவா... இல்லை நனவா... என்ற ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். இத்தனை நாள் கற்பனையிலேயே இருந்த தனது 'உளம் கவர் கள்வனின்' தரிசனத்தால்... ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போன பக்தரின் வாயிலிருந்து... பக்தியின் ஊற்றாக பத்துப் பாடல்கள் வெளிவந்தது. அந்த இறுதிப் பாடல்...
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
... என்று ஒலித்த அடுத்த க்ஷணம்... தன்னை அறியாமல் கருவறையின் உள்ளே ஈர்க்கப்பட்ட பக்தர்... அரங்கனின் திருவடியில் ஒன்று கலந்துவிட்டார். 'தேகவியோகம்' என்ற உயர்ந்த கதியான... தேகத்துடனான வைகுந்தப் பயணத்தில்... அரங்கனுடன் இணைந்தே விட்டார்.
அந்த பக்தனை... ஆழ்வார்களில் ஒருவராக்கி... 'திருப்பாணாழ்வார்' என்ற திருநாமத்துடன்... அன்றும்... இன்றும்... என்றும்... தனது திருச்சன்னதியில்... பிரபந்தமாக... அரையரிகளின் மூலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான் அரங்கன்.
திருவரங்கம்... பூலோக வைகுந்தம்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment