ஸாயீயின் புகழ் பாடும் பாடல் : 1
எல்லை என்றில்லாமல் எங்கும் நிறைபவனே
இல்லை எனாதபடி எதிலும் உறைபவனே
எங்கோ பிறந்திருந்த அறியாத அடியேனை
கருணை மனம் கொண்டு காத்தருள செய்பவனே.
மாவலியின் முடிமீது ஓரடி வைத்தான் - அந்த
மலர்ப்பாதம் தனைக் கொண்டு சீரடி அளந்தான்
நாளொன்றாய் வித விதமாய் உணவை இரந்தான் - அந்த
உணவோடு அவர் சேர்த்த பாபம் களைந்தான். ( எல்லை...)
பரப்பிரமமான தன்னை பக்கிரி என்றான் - வாழும்
அனைவர்க்கும் ஆண்டவனே உரிமை என்றான்
உலகோரின் வினை தீர்க்க விறகை எரித்தான் - அந்த
வினை மீண்டும் தோன்றாமல் விபூதி அளித்தான். ( எல்லை...)
பக்தர்களை குருவியென அன்பாய் அழைத்தான் - ஏழ்
கடல் தாண்டி இருந்தாலும் நூலால் இழுத்தான்
அவர் வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும் அறிந்தான் - அந்த
அடியார்க்கு ஆனந்த அருளைப் பொழிந்தான். ( எல்லை...)
ஸாய்ராம்.
(அடியேன் மனதில் 29,01,2004 அன்று ஸாயீ மகான் அருளிய பாடல்)

No comments:
Post a Comment