மனம் என்பது என்ன...?
உடலின் எந்தப் பகுதியில் மனம் அமைந்திருக்கிறது...? அதன் வடிவம் என்ன...? அதை அறிந்து கொள்ளும் உபாயம் ஏதும் இருக்கிறதா...? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆய்ந்து அறியும் அறிவின் இயலில் பதில் இல்லாமல் போகும் போதுதான்... மனம் என்றால் என்ன என்ற அனுபவித்து உணரும் ஆன்ம இயலில் தேடல் செல்கிறது. உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப் படுத்தும் வல்லமை இந்த மனதில் ஒளிந்திருக்கிறது என்ற உண்மையை உணரும் போதுதான் இந்த அற்புதத் தேடலின் அவசியம் புரிகிறது.
உடல்... ஜீவன்... ஆத்மா என்ற மூன்று நிலைகளின் கூட்டுதான் இந்த மனித வாழ்வு. ஆத்மா என்ற மகா சக்தியிலிருந்து உருவானதுதான் ஜீவன் என்ற உயிர். அந்த ஜீவனுக்கான வடிவமே இந்த உடல் என்ற உருவம். ஆத்மா நிரந்திரமானது... ஏனெனில் அது என்றும் இருக்கும் இறைவனின் சொரூபம். உடல் மாறுதலுக்கும், அழிவிற்கும் உட்பட்டது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு காரணத்திற்காக உருவானதே... ஜீவன் என்ற பிறவி.
பிறவிக்குக் காரணம் கர்மா என்ற பூர்வ வினைகள்தான். எத்தனையோ பிறவிகளில் இந்த ஜீவன் சேர்த்துக் கொண்ட மொத்த வினைகளின் தொகுப்பிலிருந்து (சஞ்சித கர்மா)... இந்த பிறவிக்கான இன்ப - துன்ப சம கலவையின் ஒரு தொகுப்பை (பிராரர்த்த கர்மா) அனுபவிப்பதற்காக ஒரு பிறவியை அடைகிறது. இந்தப் பிறவியில்... தனது வினைகளை இன்பமாகவும்... துன்பமாகவும் அனுபவிக்க அதற்கேற்ற உடலும் அமைகிறது.
அந்த உடலில், இந்த ஜீவன் ஒரு மனமாக உருவெடுக்கிறது, அந்த மனம் என்ற ஊற்றுதான் தொடர்ந்து... இன்பம் மற்றும் துன்பம் என்ற தொடர் வினைகளை ஜீவனின் வாழ்வு முழுவதும் சுரந்து கொண்டிருக்கிறது. அந்த ஊற்று நின்றுவிடும் போது... ஜீவனின் வாழ்வும்... இந்த உடலிலின் பயணத்தை முடித்துக் கொள்கிறது.
அந்த இன்பத்திற்கும்... துன்பத்திற்கும் மூலமான கர்ம வினைகள்... ஜீவனின் மனதில்... எண்ணங்களாக வெளிப்படுகிறது. அந்த எண்ணங்களே, இந்த ஜீவனின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஆதலால், மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment