Sunday, December 4, 2022

'இது மட்டும்தானா... சரி, போய் வா. நான் உன் மகளின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் !'... மஹா பெரியவர் நடத்தி வைத்த திருமணம்.


 

செக்கந்திராபாத்தைச் சேர்ந்த, திரு. N. ராமசுவாமி... அவர்களின் அனுபவம்...

'சதாராவில் பெரியவர் முகாமிட்டிருந்த போது, அவரைச் சந்திக்க இரண்டு மணி நேரமாகக் காத்திருந்து, தரிசினம் தாமதாமாவதால், அதுவரை அருகிலிருக்கும் ரெயில்வே நிலையத்திற்கு பரிசோதனை செய்யலாம்.. என்று சென்ற என்னை, பெரியவர் அழைத்துவரச் சொன்னதாக, மடத்து சிப்பந்தி வந்த சொன்ன போது, ஆச்சரியத்தில் முழ்கிப் போனேன் !..

பாதியில் விட்டுச் சென்றதற்காக, நான் மன்னிப்பு கோருவதைக் கூட கவனிக்காத பெரியவர், 'உனக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டார்.

அப்போது என் மனதிலிருந்தது ஒன்றே ஒன்றுதான், அது என் மகளின் திருமணம் தாமதமாவதுதான். எனவே, 'பெரியவா, எனது மகளுக்கு வரன் அமைவது தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டி, எனது தந்தையாரும் ஜாதகங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். சரியாக் பொருந்தும் வரன்களிடமிருந்து பதில்கள் வருவதுமில்லை...ஏனையது பொருந்தவும் இல்லை...' என்று கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், 'இது மட்டும்தானா... சரி, போய் வா. நான் உன் மகளின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் !' என்ற போது, வானம் என் மீது பனி மழை பொழிந்ததைப் போல இருந்தது.

அன்பின் கருணை மழையில் நனைந்த நான், என்னை அறியாமல், 'சத்தியமா சொல்கீறீர்களா ?' என்று அபத்தமாகக் கேட்ட போது, சிரித்துக் கொண்டே, ஆம் என்று தலையசைத்து என்னை ஆசீர்வதித்து அனுப்பினார்... பெரியவர்.

பெரியவரின் ஆசிகள அடுத்த இரண்டு மாதங்களில், ஒரு பொருத்தமான வரனைக் கொண்டு வந்து இணைத்து, திருமணத்தையும் இனிதே நடத்தி வைத்தது. காலம் வேகமாக இரண்டு வருடங்களைக் கடந்தும் போனது.

இரண்டு வருடம் கழிந்து, கார்னூல் முகாமில் பெரியவரை தரிசிக்க சென்ற  போது, எனது மகளையும்,,, அவளுக்குப் பிறந்த குழந்தையையும்... அழைத்துச் சென்று, மஹா பெரியவரை தரிசித்து, நன்றியுடன் அவர் பாதங்களில் குழந்தையை கிடத்தி வணங்கி எழுந்த போது, எங்களை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார். மன நெகிழ்ச்சியுடன் நாங்கள் விடை பெற்ற போது, பெரியவரின் திருவடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்தே போனோம்.

சற்று நடந்த எங்களை. பெரியவரின் 'சொடுக்கு' தடுத்து நிறுத்தியது. திரும்பிப் பார்த்த எங்களிடம், 'மடத்தில் வைத்து, இந்தக் குழந்தையை எப்படி ரக்ஷிப்பது ? தூக்கிச் செல்லுங்கள் !' என்றதும், நெகிழ்ந்து குழந்தையை தூக்கிய போது, 'இது ராமஸ்வாமியை திருப்திப் படுத்துகிறதா ?' என்ற பெரியவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்து நின்றோம்.

'உனது மகளின் பெயர் என்ன ?' என்ற பெரியவரின் அடுத்தக் கேள்விக்கு...

'உமா'... பெரியவா !' என்று பதிலளித்தேன்.

'மாப்பிள்ளையின் பெயர்...?' என்ற கேள்விக்கு, 'சதாசிவம்... பெரியவா !' என்று பதிலளித்தேன். 

புன்னைகைத்துக் கொண்டே, 'அது சரி... நீ என்னை நிந்திக்கக் கூடாது. நான் இந்தப் பெயர் பொருத்தை வைத்துதான், இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தேன் !', 

... என்ற பெரியவரின் அன்பு வார்த்தைகள்... பெரியவரின் ஞாபக சக்தியின் வலிமையையும்... அவரின் எல்லையில்லா அனுக்கிரகத்தையும்... எத்தனை கோடி ஜென்மங்களிலோ சேர்ந்த எங்களின் புண்ணியங்களையும்... நினத்தபடியே, ஆனந்தக் கண்ணிரில் மிதந்தேன் !'

(மூலம் : மஹா பெரியவரின் தரிசன அனுபவங்கள். பாகம் 3)

(ஜகத் குரு மஹா பெரியவா - காஞ்சி பரமாச்சாரியா... முக நூலிலிருந்து தொகுக்கப் பட்டது.)

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...