முன் பகுதியின் (பகுதி 1) தொடர்ச்சி...
(...'ஜனன கால ஜாதகம்' இந்தப் பிறவியில் நாம் கொன்டு வந்திருக்கிற, 'கர்ம வினைகளின் விளைவுகளை' மிகத் தெளிவாகவும்... கடந்த பிறவியின் நிலைகளையும்... அடுத்து வரும் பிறவியின் நிலைகளையும்... 'நிழல் கொடுகளாகவும்' சுட்டிக் காட்டுகிறது. இந்த சூட்சுமத்தைத்தான், 'கர்ப்ப செல் நீக்கிய தசா புத்தி இருப்பு' என்ற குறிப்பு கோடிட்டுக் காட்டுகிறது...)
ஒருவரது ஜதகத்தில்,
- 'லக்னாதிபதி' யாகிய 'சந்திர பகவான்' (கடக லக்னம்) 'பாக்கிய ஸ்தானத்தில்' மீன இராசியில், ரேவதி நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில் அமர்ந்தார்.
- பாக்கியாதிபதியாகிய 'குரு பகவான்', 12 ஆம் பாவத்தில், மிதுன இராசியில், புனர்பூச நட்சத்திரத்தின் 4 ஆம் பாவத்தில் அமர்ந்தார்.
- 12 ஆம் பாவதிபதியோ (புத பகவான்), தைர்ய ஸ்தானத்தில் (கன்னி இராசி) ஹஸ்த நட்நத்திரத்தின் 3 ஆம் பாவத்தில் அமர்ந்து, லக்னாதிபதியான 'சந்திர பகவானை' சமசப்தமாக பார்வை செய்கிறார்.
மேற்கண்ட அமைவு அளிக்கும் பலன், குரு பகவானது தசாவில் - புத பகவானின் புத்தியில் - சந்திர பகவானின் அந்தர வேளையில்... ஜாதகர், கடல் கடந்து வெளி நாடு சென்று, 'திரை கடலோடியும் திரவியம் தேடுபவராக' இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால், மேற்குறிப்பிட்ட 'குரு பகவான் - புத பகவான் - சந்திர பகவான்' இவர்களின், தசா/புத்தி/அந்தரங்களை, ஜாதகர் இந்தப் பிறவியில் அடைய முடியாதவாறு அவரின், இந்தப் பிறவிக்கான தசாக்கள் அமைந்திருக்கிறது. புத பகவானின் ஏறத்தாள 15 வருடங்களையும்... கேது பகவானின் 7 வருடங்களையும்... சுக்கிர பகவானது 20 வருடங்களையும்... சூரிய பகவானது 6 வருடங்களையும்... சந்திர பகவானது 10 வருடங்களையும்... செவ்வாய் பகவானது 7 வருடங்களையும்... எஞ்சிய வாழ்வு, 'ராகு பகவானது' 18 வருடங்களில் கரலங்களில் கடந்து போய் விடும்.
இந்தப் பலனை இவர், இந்தப் பிறவியில் அனுபவிக்க முடியாது என்பதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு வேளை 'சந்திர பகவானது தசா - குரு பகவானது புத்தி - புத பகவானது அந்தரக் காலத்தில்', ஒரு சுற்றுப் பயணமாக வேண்டுமானால், வெளி நாடுகளுக்குச் சென்று வரலாம். முழுப் பலனையும் அனுபவிக்க வேண்டுமெனில், அடுத்தப் பிறவிக்குத்தான் காத்திருக்க வேண்டும்.
(...தொடரும்)
ஸாய்ராம்.

No comments:
Post a Comment