Monday, June 27, 2022

Maharishi's Gospel B 1. Ch VII (தமிழாக்கம்... அடியேன்)


'சில வேளைகளில், வாழ்வில் திருப்தி அடையாத நிலையில், தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே, இறைவனை நாடி, தனது ஆசைகளுக்கான பிரார்த்தனைகளை ைறைவன் முன் வைக்கின்றான்.

இறைவனிடம் சென்ற இவனது மனம், படிப்படியாக தூய்மையடைந்து, தனது ஆசைகளை விட, இறைவனது அருளைப் பெற்றுக் கொள்வதிலேயே திருப்தியடைவதை உணருகிறான்.

அந்த நிலையில்தான், இறைவனது அருள் கருணை மலர ஆரம்பிக்கிறது.

அந்த கருணை ஒரு 'சத்குருவின்' வடிவத்தை எடுத்து, அவனுக்கு முன் தோன்றி, அவனது மனதை தூய்மைப் படுத்தி,  உண்மையை உணர்த்துகிறது.

இப்போதுதான், பகதனின் மனம் வலிமை பெறுகிறது. அதற்குப் பின்தான் உள் திரும்ப ஆரம்பிக்கிறது. படிப்படியாக உள் திரும்பிய மனம், தியானத்தால் ஆடாத, அசையாத நிலையைப் பெறுகிறது.'

- பகவான் ரமண மகிரிஷி.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...