Tuesday, April 26, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 219. மூச்சுப் பயிற்சியும்... பிரணாயாமமும்...


'இறைவன்... உயிர்... உடல்...' என்ற இந்த 'முக்கூட்டு சங்கமத்தில்தான்', இந்த ஜீவனின் வாழ்வு கடந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் நிலைத்திருக்கும் இறை சக்திக்கும்... நிலையில்லாத உடலுக்கும்... இடையே இருக்கும் ஜீவன், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை, இறை சக்தியின் துணை கொண்டுதான் வாழ்கிறது. அந்த இறை சக்திதான், ஜீவ சக்தியாக... 'ஜீவ சக்தி வாயுவாக'... இந்த உடலுக்குள்ளும், பிரபஞ்ச சக்தியாக உடலுக்கு வெளியேயும் இருந்து அருள்கிறது.

பிரபஞ்ச சக்தியுடன், இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவ சக்தி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்புதான் 'மூச்சுக் காற்றாக' இருக்கிறது. அது பிரபஞ்சத்திலிருந்து  உடலுக்குள், நாசித் துவாரங்கள் வழியே நுரையீரல்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த 'சுவாசப் பாதையை' சீராக்குவதற்காக செய்யும் பயிற்சியைத்தான் 'மூச்சுப் பயிற்சி'.என்று அழைக்கிறோம்.

நமது உடலுக்குள் உலவுகிற ஜீவசக்தியான வாயு, உள்ளிருந்து அருளும் இறை சக்தியிடமிருந்துதான் உற்பத்தியாகிறது. அந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து (சுழுமுனை) வெளிப்படுகின்ற ஜீவ சக்தியான வாயுவை, அதன் உற்பத்தி ஸ்தானமான... மூலமான... 'சுழுமுனையிலேயே ... கொண்டு சேர்க்கும் பயிற்சியைத்தான் 'பிரணாயாமம்' என்று அழைக்கிறோம். 

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...