'துர்வாஸ முனிவர்' தனது நீண்டகாலத் தவத்திலிருந்து வெளி வந்து, மாந்தர்கள் வசிக்கும் பகுதியை நோக்கி நடை போட்டார். அப்போது, அருகே மரத்திலிருந்த ஒரு கொக்கு, அவரின் தலையில் எச்சமிட்டு விட்டது. அந்த கொக்கை அவர் பார்த்தார்... உடனே அந்த கொக்கு எரிந்து விழுந்தது. அவரின் பயணம் தொடர்ந்து, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. பசியிலிருந்த முனிவரின் அழைப்பை ஏற்று, உடனே வர முடியாத சூழலில் இருந்த அந்த வீட்டுத் தலைவி, சற்று தாமதித்து, அவருக்கு உணவளிக்க வந்தார். அவரை கோபமாக ஏறிட்டுப் பார்த்தார் துர்வாஸர். அன்னத்தை அளித்த அந்தப் பெண், 'என்னைக் கொக்கென்று நினைத்தீரோ ? கொங்கணரே !' என்றாள். அவளின் ஞானத்தை உணர்ந்து கொண்ட துர்வாஸர் அமைதியானார்.
இந்த நிகழ்வில், துர்வாஸரின் பார்வையில் தாமதம் என்பது... 'நியாயமற்றதாக' இருந்தது. ஆனால், தனக்கென்றுள்ள கடமைகள முடித்து விட்டு, காத்திருக்கும் முனிவருக்கு உணவளிக்க வந்தது... 'தர்மத்திற்கு' உட்பட்டு இருந்தது. இந்த தர்மத்தை உணர வைப்பதற்காகத்தான், அந்தப் பெண்ணின் 'ஞானம்' முன் நிருத்தப்பட்டிருக்கிறது.
இது போல, தன்னிடம் ஆலோசனைக்காக வரும் ஜாதகரின், ஜாதகத்தை ஆய்ந்து, அவரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்குவதற்கு முன், அந்த ஜாதகரின் 'தர்மம்' என்ற பாக்கிய ஸ்தானமான 9 ஆம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.
அந்த தர்ம ஸ்தானத்தையும்... தர்ம ஸ்தானாதிபதியையும்... ஆய்ந்து, அதற்கேற்ப தனது ஆலோசனையை வழங்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல ஜோதிடரின் கடமையும் கூட. ஏனெனில் ஜோதிடக் கலை, தர்மத்தை மட்டுமே உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதன் வழியேதான் ஜீவர்களை வழி நடத்திக் கொண்டும் இருக்கிறது.... மிக சூட்சுமமாக !
ஸாய்ராம்.
No comments:
Post a Comment