'சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே '
உள்ளும் வெளியுமாக பின்னப்பட்டுப் போகும், ஜீவ சக்தியான வாயுவின் கதி, எப்போது ஏக கதியாக (பிரணாயமம்) பிரம்மாந்திரத்தைத் தொடுகிறதோ, அப்போதுதான் ஜீவன் தொடர் பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு,, ஜீவனின் உற்பத்தி ஸ்தானமான 'மரணமில்லாப் பெருவாழ்வான', பரப்பிரம்மத்துடன் ஒன்று கலக்கிறது.
இதுதான், 'ஜீவ ஈஸ்வர ஐக்கியம்' என்ற முக்தி.
ஸாய்ராம்
.
No comments:
Post a Comment