தவம் புரிந்து கொண்டிருந்த யோகியர்களுக்கு முன் வந்து பிரசன்னமான 'நாரத மகிரிஷியை' வணங்கிய யோகியர்கள், 'சுவாமி !, தாங்கள் வைகுண்டத்தில் இருந்துதான் வருகிறீர்களா ?' என்று கேட்டனர். 'ஆம்' என்று பதிலளித்த மகிரிஷியிடம், 'சுவாமி ! பகவான் ஸ்ரீ நாராயணன், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ?' என்று கேட்டனர்.
அதற்கு மகிரிஷி, 'ஒரு ஊசியின் காது வழியாக ஒட்டகங்களையும், யானைகளையும், கூட்டம் கூட்டமாக போகச் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார் !' என்றார். அதைக் கேட்ட முதல் யோகி, 'நாரத மகிரிஷியே, தாங்கள் கூறுவது உண்மையாக இருக்காது. இதிலிருந்தே தாங்கள் வைகுண்டத்திற்கே போகவில்லை என்பது உறுதியாகிறது' என்றார்.
புன்னகைத்தபடியே நாரதர், இரண்டாவது யோகியின் பக்கம் திரும்பினார். 'இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது ! அவரால் முடியாத காரியம் ஏது உண்டு இந்த பிரபஞ்சத்தில் ?' என்றார் யோகி. சிறு குழந்தைக்கு ஒப்பான நம்பிக்கையுடன், பகவானால் எல்லாம் முடியும்... என்ற இந்த யோகியே, இறைவனை உனரத்தக்கவர் என்று, மகிரிஷி உறுதி செய்தார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment