'தண்ணீரில் தத்தளிப்பவனின் நிலையும், தரையில் தத்தளிப்பவனின் நிலையும் ஒன்றே. தண்ணீரில் தத்தளிப்பவ்னுக்கும் அலையே துணை. தரையில் தத்தளிப்பவனுக்கு வழிப்போக்கரே துணை' - சத்குருநாதர்.
அனைத்தையும் இழந்து, அனாதையையாய் தவித்து நிற்கும் ஒரு எளிய மனிதனின் நிலையையும்... அவனுக்கு இறைவன் அளிக்கும் கருணையையும்... இரண்டு உதாரணங்களுடன் விளக்குகிறார், குருநாதர்.
கரையே தென்படாத கடலின் நடுவே, தன்னந்தனியாகத் தவித்துத் தத்தளித்து நிற்கும் ஒருவனுக்கு, இறைவனின் அருளால், அந்தக் கடலின் அலையே துணையாகிறது. அவனை தனது அலைக் கரகங்களால் அணைத்து, கரையில் சேர்க்கிறது.
அது போல, அனைவராலும் கைவிடப்பட்டு, தன்னந்தனியனாக இந்த தரையில் தத்தளித்து, எங்கு செல்வது ? யாரிடம் சென்று உதவி கேட்பது ? யாரை அண்டிப் பிழைப்பது ? என்று தவித்து நிற்கும் ஒருவனுக்கு, இறைவனின் கருணையினால், அந்த வழியில் வரும், கருணைமிகுந்த ஒரு வழிப்போக்கனே, இவனை மீட்டு, அவனுடன் அழைத்துச் சென்று, அவனுக்கான எதிர்காலத்தைக் காட்டியருள்வான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment