'லக்னம்', ஜீவன் என்ற உயிராகக் கருதப்படுகிறது. 'இராசி', ஜீவன் குடிகொன்டிருக்கிற உடலாகக் கருதப்படுகிறது.
ஆதலால்தான், 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டிருக்கிற ஜீவனது, 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்துகிற 'கிரகங்களின் அமைவுகள்', உயிராகக் கருதப்படுகிற ஜீவனின், லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.
அந்தக் 'கர்ம வினைகளின் வெளிப்பாடுகளை', ஜீவன் எப்போதெல்லாம் அனுபவிக்கிறது என்பதை, ஜீவன் குடிகொண்டிருக்கிற உடலைக் குறித்திடும், இராசியை அடிப்படையாகக் கொண்ட தசாவின் வழியாகவும்... கோள்களின் நகர்தல் என்ற சாரங்களின் வழியாகவும்... ஆய்வு செய்யப்படுகிறது.
* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'திரிகோணங்களில்' அமையும் போது,
~ இந்தப் பிறவியில் ஜீவன் அனுபவிக்கும் அனுபவங்கள் அனைத்தும், தனது 'கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' நடைபெறுகின்றன... என்ற உண்மையை உணர்ந்து கொண்டு... தான் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் அனைத்து செயல்களையும், பற்றற்று அணுகும் பக்குவத்தை உருவாக்குகிறது.
* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'கேந்திரங்களில்' அமையும் போது,
~ தனது 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' ஜீவன் அனுபவிக்கிறது என்பதை உணர்ந்திருந்தாலும், உலக வாழ்வின் வெற்றி என்ற இலக்கை நோக்கி, ஆற்றின் ஓட்டத்திற்கு எதிரே பயணிப்பது போன்ற, பெரும் முயற்சியை ஜீவன் மேற்கொள்கிறது. காலமும், நேரமும் கூடி வரும்போது அதில் வெற்றியையும் பெறுகிறது.
* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'பணபர ஸ்தானங்களில்' அமையும் போது,
~ உலக வாழ்வை நோக்கிய பயனத்தில் ஜீவன் பயணிக்க வேண்டியிருக்கிறது. தனக்காக வாழாமல், தான் சுமந்திருக்கும் கடமைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'மறைவிடங்களில்' அமையும் போது,
~ தான் வாழ்வில் மேற்கொள்ளும் அல்லது தான் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்திற்கும், தான் காரணமல்ல... என்று மட்டுமல்ல, அந்த நிகழ்வுகளில் பங்களிப்பவர்களும், தன்னோடு பயணிப்பவர்கள் மற்றும் தனது முன்னோர்களும்தான் காரணம்... என்று கூறும் மனப்பாங்கு ஓங்கியிருக்கிறது.
... இவ்வாறு, லக்னம் என்ற ஜீவனும்... ஜீவன் உறையும் இராசி என்ற உடலும்... இணைந்தும், பிரிந்தும் செயல்படுவதுதான்... கரம வினைகளிக் கொண்ட வாழ்வாக அமைகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment