சாதகர்களின் நிலையையும்... சாதாரண மனிதர்களின் நிலையையும்... பகவானுடனேயே இருந்து, அனுபவித்து மகிழ்ந்த 'ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்' வெளிப்படுத்துகிறார்.
இந்த இரு நிலைகளிலும் இருக்கும் மாந்தர்களின் நோக்கங்களையும்... இயல்புகளையும்... அவர் பிரித்து அளிக்கும் முறை, அலாதியானது.
இவ்வுலகில் வாழும் அனைத்து மாந்தர்களின் தேடலும்... இடைவிடா ஆனந்தத்தை நோக்கியதாகவே இருக்கிறது. இந்த ஆனந்தத்தை, உலகியல் நிலையிலிருந்து மாத்திரம் அனுபவித்து, அதன் மூலம் தனது ஐம்புலன்களையும் திருப்தி செய்யப் போராடும், சாதாரண மனிதனின் நோக்கம் ஒரு புறமும்... தனது உணவு, உடை, உறையுள் என்ற தேவைக்காக மட்டும், இந்த உலகியல் சுகத்தை அனுபவித்துக் கொண்டு, தன்னாட்டம் (Self - Attention) என்ற உள் தேடலுக்கு மிகுதி நேரத்தை பயன்படுத்தும், சாதகர்களின் நோக்கம் மறு புறமும்... என இரு விதமான நோக்கங்களை பிரித்தளிக்கிறார்.
இந்த இரு நிலைகளில் இருக்கும் மாந்தர்களின் இயல்புகள் எவ்வாறு இருக்கும்... என்பதையும் விளக்குகிறார். தனது சுகானுபவங்களுக்காக, அதர்மம் என்றும் பாராமல், எந்த விதமான வழி முறைகளையும் கையாளும் சாதாரன மனிதர்களின் இயல்பு ஒரு புறமும்... பசித்திருந்தாலும், தனித்திருந்தாலும், தவித்திருந்தாலும், தர்மத்தின் வழியான வாழ்வை மட்டுமே கையாளும் சாதகர்களின் இயல்பு மறு புறமும்... என, இரு விதமான இயல்புகளையும் விரித்தளிக்கிறார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment