அதுவே, உடல் என்ற வீட்டின் வாயிலில் இருந்து, உள் திரும்பிப் பார்க்கும் போது, அது உள் நோக்கிய, ஆன்மீக வழியேயான பயணமாகிறது.
உலகத்தின் வழியேயான பயணத்திற்கு ஆதாரமாக இருப்பது, நமது மனதில் தோன்றும் எண்ணங்களான, 'கர்ம வினைகள்' என்ற 'இன்ப - துன்பங்கள்' அடங்கிய 'இரட்டைச் சூழல்கள்தான்'.
அதுவே, உள் வழியேயான பயணத்திற்கு ஆதாரமாக இருப்பது, நமக்குள் இருந்து அருள் புரியும் 'ஆத்மா' என்ற 'இறை சொரூபம்தான்'.
இந்த உள் வழியேயான, ஆன்மீகப் பயணத்திற்கான வழிகளில் ஒன்றுதான் 'தியானம்' என்ற 'உள் நோக்குதல்'. இந்த உள் நோக்குதலின் மூலம், ஆத்மாவையும்... மனதில் தோன்றும் எண்ணங்களையும் பகுத்துப் பார்க்க முடியும்.
இந்த தியானம் என்ற 'யுக்தி' மூலமாக ஒருவர் அனுபவிக்கும் அந்த அனுபவத்தைக் கவிஞர், தனது பாடல் வரிகளில் பயன்படுத்தியிருப்பது அற்புதமாக இருக்கும்...
'பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...'
உடலுக்குள் இருந்து அருள் செய்யும் 'ஆத்மாவை', தெய்வம் என்றும்... மனதில் தோன்றும் இரட்டைச் சூழல்களுக்கு மூலமான கர்ம வினைகளை... 'மிருகம்' என்றும்... அவர் வருணித்திருப்பது அற்புதமாக இருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை உணர்வது மட்டுமல்ல... அதை, தியானத்தின் மூலமாக உணரும்போது, அடையக் கூடிய 'லாபத்தையும்' கவிஞர், தனது அடுத்த வரிகளில் சுட்டிக் காட்டும் போது... கவிஞரின் 'ஆன்மீக ஞானம்' இன்னும் அற்புதமாக வெளிப்படுகிறது.
'ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா...
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா...'
கவிஞர், கண்ணதாஸன் அவர்களிடமிருந்து வெளிப்படும் இந்த 'அருள் ஞானம்தான்', என்னை எப்போதும் அவர் பாடல்களுக்குள் மீண்டும், மீண்டும் பிரவேசிக்க வைக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment