பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரம்பொருளான 'விஷ்ணு பகவான்'... பக்தர்களை அனுக்கிரகிப்பதற்காக, பூலோகத்தில் 'ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாளாக' எழுந்தருளியிருக்கிறார்.
அந்த பூதேவித் தாயார்தான், ஸ்ரீ வில்லிப்புத்தூரில், வடபத்திரசாயியாக எழுந்தருளியிருக்கும் 'ரங்கமன்னார் ஆலயத்தின்', திருத்துழாய் வனத்துக்குள், ஒரு குழந்தையாக எழுந்தருள்கிறார்.
அன்றாடம் 'வடபத்ரசாயிக்குத்' திருத்துழாயினால் ஆன மாலையை சாற்றுவதற்காக, நந்தவனத்திற்கு வரும் 'பெரியாழ்வாரின்' கண்களில்தான்... இந்த 'தெய்வக் குழந்தையைக்' காண வைத்தான்... 'ஸ்ரீ ரெங்கநாதன்'. அந்தக் குழந்தையை வாரியணைத்து... 'ஆண்டாள்' என்று பெயர் சூட்டி வளர்த்துவந்தார் ஆழ்வார்.
பின்னாளில், 'ஆண்டாள் தாயரை', திருவரங்கத்திற்கே அழைத்து வர வைத்து... அனைவருக்கும் முன்னால்... தனது கருவறைக்குள்ளேயே ஈர்த்து... தன்னோடு அணைத்துக் கொண்டான், 'ஸ்ரீ ரெங்கநாதன்'.
'ஆசையோடு நான் வளர்த்த பிள்ளையை... திருவரங்கப் பெருமாள், கவர்ந்து கொண்டு விட்டானே... !' என்று பெரியாழ்வார் அழுது புலம்பும் போது, 'ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கநாதராக' காட்சியளித்து...ஆண்டாள் தாயாரின் அவதார ரகசியத்தைக் கூறி, பெரியாழ்வாருக்கு அனுக்கிரஹம் செய்தார் 'திருவரங்கப் பெருமாள்'.
ஆகவே, ஆண்டாள் தாயாரின் அவதாரம் ஒரு தாய். தந்தை என்ற பெற்றோருக்கு நிகழாததால் அவருக்கான 'ஜனன ஜாதகம்' இருக்க வாய்ப்பில்லை. பெரியாழ்வார், என்று... அந்தக் குழந்தையைத் திருத்துழாய் நந்தவனத்தில் கண்டாரோ... அந்த, ஆடி மாதத்து, பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாளில் கணிக்கப்பட்ட ஜாதகத்தைத்தான்... ஆண்டாள் தாயாரின் ஜனன ஜாதகமாக கணித்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால், இறைவனின் திருவுள்ளப்படி இந்த நிகழ்வு நிகழ்ந்திருப்பதால், இந்த ஜாதகம் தாயாரின் அவதார சூட்சுமங்கள் அனைத்தையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. 'துலாம் லக்னமாகவும்'... 'சிம்மம் இராசியாகவும்'... அமைந்த இந்த ஜாதகத்தில்,
1. லக்னாதிபதியாகிய 'சுக்கிர பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சனி பகவானும்'... பாக்கியாதிபதியாகிய 'புத பகவானும்'... திரி கோணாதிபதிகளாகி... ஒன்றாக இணைந்து... கர்மம் என்ற ஜீவன் ஸ்தானத்திலிருந்து... சுக ஸ்தானமான '4 ஆம் பாவத்தை' பார்வை செய்கிறார்கள்.
சனி பகவானின் அதிதேவதையாக... 'ஸ்ரீ நிவாஸப் பெருமாள்' அமைகிறார். புத பகவானின் அதிதேவதைகளாக... ஸ்ரீ நிவாஸப் பெருமாளும், வரதராஜப் பெருமாளும் அமைகிறார்கள். சுக்கிர பகவானின் அதிதேவதையாக... ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் அமைகிறார்.
இவ்வாறு, 'பூதேவித் தாயார் சமேத ஸ்ரீ நிவாஸப் பெருமாளிடமிருந்து' அவதரித்த 'ஆண்டாள் தாயார்'... ஸ்ரீ ரெங்கநாதரின் அனுக்கிரகத்தோடு, 'ஆண்டாள் தாயார் சமேத ரெங்க மன்னராக'... தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய நிகழ்வுகளைத்தான்... இந்த 'திரிகோணாதிபதிகளின் இணைவு' சுட்டிக் காட்டுகிறது.
2. ஆனால், இந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற... பெரியாழ்வாரின் துணை தேவைப்படுகிறது. பெரியாழ்வார், ஒரு தந்தையாக... ஒரு குருவாக... இருந்து, ஆண்டாள் தாயாரை வளர்த்து... அவரை 'ஸ்ரீ ரெங்கநாதரின் திருவடியில்' சேர்க்க உதவியிருக்கிறார். இந்த நிலையை...
~ லக்னாதிபதியானா 'சுக்கிர பகவானை'... தனது நட்சதிர சாரத்தால் (ஆயில்யம் 4 ஆம் பாதம்) இயக்கும் 'பிதுர் ஸ்தானதிபதியும் - பாக்கிய ஸ்தானாதிபதியும் - தர்ம ஸ்தானாதிபதியுமான'... 'புத பகவான்' உறுதி செய்கிறார்.
~ மேலும், 'பிதுர் காரகனான'... 'சூரிய பகவானும்' இந்த திரி கோணாதிபதிகளுடன் இணைந்து... இந்த சூட்சுமத்தை உறுதி செய்கிறார்.
~ தந்தையாக மட்டுமல்ல... பெரியாழ்வார் ஒரு குருவாக இருந்து அருள் செய்கிறார் என்பதை...'குரு பகவானே' தனது சுய நட்சத்திர சாரத்தில் (புனர் பூசம் 4 ஆவது பாதம்) இந்த 'திரி கோணதிபதிகளுடன்' இணைந்திருப்பதும்... நவாம்ஸத்திலும் இதே வீட்டில் அமர்ந்து 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்திருப்பதும் உறுதிசெய்கிறது.
3. பெரியாழ்வார், ஒரு தந்தையாக... ஒரு குருவாக... இருப்பதை... 'குரு பகவான்' மேலும் சூட்சுமமாக வெளிப்படுத்தும் ஒரு அமைவைத்தான்... நவக் கோள்கள் தமது அமைவின் மூலம்... இந்த 'அற்புத பிரசன்ன ஜாதகத்தில்' சுட்டிக் காட்டுகின்றன.
~ லக்னாதிபதியான 'சுக்கிர பகவான்; இராசியாதிபதியான 'சந்திர பகவானின்' வீடான... 10 ஆம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார்.
~ இராசியாதிபதியான. 'சந்திர பகவானோ'... 11 ஆம் பாவத்தில்... லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில் (பூரம் 4 அம் பாதத்தில்) அமர்ந்திருக்கிறார்.
இவ்வாறு, 'லக்னாதிபதிக்கும்... ராசியாதிபதிக்கும்'... இடையே ஒரு 'சூட்சுமமான பரிவர்த்தனை' ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல... கர்மம் மற்றும் ஜீவனம் என்ற '10 ஆம் பாவாத்திற்கும்'... ஜிவனம் மற்றும் லாபம் என்ற விருத்தி பாவமான 11 ஆம் பாவத்திற்கும்... ஒரு பரிவர்த்தனை நிகழ்கிறது. அதாவது 'சூரியன் மற்றும் சந்திர பகவான்களுக்கு இடையேயான பரிவர்த்தனை'.
இந்த 'பரிவர்த்தனையின்' சூட்சுமதாரியான 'சூரிய பகவானுடன்' .... 'குரு பகவான்' இணைந்திருக்கிறார்.
இந்த ஒட்டு மொத்த 'அவதார நிகழ்வுக்கும்'... பெரியாழ்வார் என்ற பெருந்தகைதான் சூட்சுமதாரியாக இருக்கிறார் என்பதை... இந்த 'குரு பகவானின்' அமைவே மிக அற்புதாமாகச் சுட்டிக் காட்டுகிறது.
இதுதான், 'குரு பகவானின்' அமைவின் மூலம்... ஆண்டாள் தாயாரின் அவதார 'பிரசன்ன ஜாதகம்' சுட்டிக் காட்டிடும்... 'நவக் கோள்களின் கோளாட்டம்' என்ற ஜோதிடக் கலையின் சூட்சுமம்.
ஆண்டாள் தாயாரின் திருவடிகளுக்கும்... பெரியாழ்வாரின் திருவடிகளுக்கும்... சமர்ப்பணம்.
ஹரி ஓம் நாரயணாய நமஹ.
ஸாய்ராம்.
(இதைத் தெளிவாக, காணொளியாக... கீழே கண்ட இணைப்பில் காணலாம்.)
https://youtu.be/zgwA_s4NEOc

No comments:
Post a Comment