முன் தொடர்ச்சி ...
ஒரு உதாரண ஜாதகரின்..
பெயர் : G. THIRUMURUGAN.
பிறந்த தேதி : 2.11.1991.
நட்சத்திரம் : பூரம் 3 ஆம் பாதம்.
பிறவி எண் : 2 ( சந்திர பகவான் )
விதி எண் : 6 ( சுக்கிர பகவான் )
பெயர் எண் : 3 ( குரு பகவான் )
என்று அமைவதாகக் கொள்ளலாம்.
தொடர்கிறது ...
அந்த உதாரண ஜாதகரின்... ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜாதகர் பிறந்த போது... அவரது ஜனன கால தசா இருப்பு... 'சுக்கிர பகவானது தசாவில்'... கர்ப்ப செல் போக மீதி... 'வருடம் : 8... மாதம் : 0... நாள் : 21' ஆக அமைகிறது.
29 ஆவது வயதைக் கடந்து கொண்டிருக்கிற இந்த ஜாதகருக்கு... 8 வது வரையில் 'சுக்கிர பகவானது' தசாவும்... 14 வயது வரையில் 'சூரிய பகவானது' தசாவும்... 24 வயது வரையில் 'சந்திர பகவானது' தசாவும்... தற்போது, 31 வயது வரைக்கான 'செவ்வாய் பகவானது' தசாவும் நடந்து கொண்டிருக்கிறது.
இவரது லக்னாதியாகிய... 'செவ்வாய் பகவான்', 12 ஆமிடத்தில் மறைந்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதியாகிய... 'குரு பகவான்' 10 ஆமிடத்தில் வலுத்து இருக்கிறார். பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவானும்' 10 ஆமிடத்தில் வலுத்து இருக்கிறார்.
எண் கணிதத்தின் படி... இவரது பிறவி எண்ணான...2 ஐக் குறிக்கும் 'சந்திர பகவான்' 10 ஆமிடத்தில் வலுத்து ...பூர்வ புண்ணியாதிபதி 'குரு பகவானுடன்' இணைந்திருக்கிறார். ஆனால், அவர்கள் அமர்ந்த வீட்டதிபதியாகிய 'சூரிய பகவான்' 12 ஆமிடத்தில் 'நீசமடைந்தது' மட்டுமல்ல... அந்த வீட்டதிபதியாகிய 'சுக்கிர பகவானுடன்'... 'பரிவர்த்தனை' பெற்றுள்ளார்.
மேலும், இந்த 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில்தான்... இந்த 'சந்திர பகவான்' அமைந்துள்ளார். அதுமட்டுமல்ல... இவரின் 'விதி எண்ணான'... 6 ஐக் குறிப்பதும்'... இந்த 'சுக்கிர பகவான்தான்'.
ஆகவே... இவரது வாழ்வை... இவரின் விதி எண்ணுக்குறிய... 'சுக்கிர பகவானே' சூட்சுமமாக வழி நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
இந்த 'சுக்கிர பகவான்' ஜாதகரின் விரயாதிபதியாக அமைந்து... ஜீவன ஸ்தானாதிபதியுடன் 'பரிவர்த்தனை' பெற்று... லக்ன, பூர்வ, பாக்கியாதிபதிகளுடன் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதிலேயே... ஜாதகரை... இந்த 'சுக்கிர பகவான்தான்' சூட்சுமமாக வழி நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
இந்த 'சுக்கிர பகவானின்' ஆளுமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி... இவரின் 'பெயர் எண்ணை' ராசியில் பூர்வ புண்ணியாதிபதியாகவும்... அம்ஸத்தில் பாக்கியாதிபதியாகவும்... இராசியிலும், அம்ஸத்திலும்... வர்க்கோத்துமம் பெற்ற 'குரு பகவானின்' எண்ணில் அமைப்பது ஒன்றே உத்தமமான வழி.
ஆதலால்தான்... இவரது பெயர் எண்ணை... 3 என்ற 'குரு பகவானைக்' குறிக்கும் எண்ணில் அமைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு... எண் கணிதத்தையும்... பெயரியல் கலையையும்... ஜோதிடக் கலையுடன் ஒப்புமைப் படுத்தி ஆய்ந்து பார்ப்பதும்... ஜோதிடக் கலையின் சூட்சுமங்களில் ஒன்றுதான்.
ஆய்வுகள் தொடரும்... இறைவனின் அருளுடன்...
ஸாய்ராம்.


No comments:
Post a Comment