சர்வேஸ்வரன்... தியாகராஜ சுவாமிகளாக எழுந்தருளி அருள் பாலிக்கும், 'திருவாரூர் நகரில்' பிறக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு... முக்தி, என்ற 'தன்னுள் கலந்து விடும்' பாக்கியத்தை அருள்கிறான்.
ஏகாம்பரேஸ்வர சுவாமிகளாக எழுந்தருளி அருள் பாலிக்கும் 'காஞ்சி மாநகரில்' வாழும் பாக்கியம் பெற்றவர்களுக்கும்... அந்த பாக்கியத்தை அருள்கிறான் சர்வேஸ்வரன்.
காசி விஸ்வநாதராக சுவாமிகளாக, எழுந்தருளி அருள் பாலிக்கும் புனிதமான 'காசி மாநகரில்' ... தனது இறுதிப் பயணத்தில்... தவித்து நிற்கும் ஜீவர்களை... விசாலாட்சித் தாயாரின் மடியில் கிடத்தி... அதனை ஆசுவாசப்படுத்தி... தனது திருவடியில் இணைத்துக் கொள்கிறான்.
இந்த ஒவ்வொரு ஸ்தலத்திலும்... அந்தந்த ஜீவன்... தனது உடலொடு இருக்கும் நிலையில்தான்... ஈசனுடன் ஒன்று கலக்கும் பாக்கியம் ஏற்படுகிறது. ஒன்றில் பிறக்கவேண்டும்... இன்னொன்றில் வாழ வேண்டும்... மற்றொன்றில் மரிக்க வேண்டும்.
ஆனால்... ஒரு ஸ்தலத்தில் சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிறான்... ஜோதி வடிவாக. கிருத யுகத்தில்... இந்த ஜோதி வடிவமே நிலைத்திருந்தது. இந்த கலியுகத்தில், அந்த ஜோதி வடிவம்... பகதர்களுக்கு அருள் செய்யும்... குளிர்ந்த கிரி உருவமாகி... அண்ணாமலையாராக... திருவண்ணாமலையில் எழுந்தருளி... இந்த புவியில் வாழும் அனைத்து ஜீவர்களும்... இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு... மனதால், மனதாற நினைத்தலே போதும்... என்றும் பிறப்பில்லா உன்னத நிலையான... ஒன்று கலத்தல் என்ற முக்தியை அளித்து அருள் புரிகிறான்.
இது போன்ற ஒரு கார்த்திகை மாதத்தில்தான்... இந்த அருள் ஜோதி வடிவத்தின் அருள் மழை பொழிந்தது.
அதே கார்த்திகை மாதத்து முதல் நாளில்... அந்த அருளாளனது திருவடியை நினைத்து உருகி நிற்கிறோம்.
இன்றிலிருந்து, நாங்கள் அன்புடன் ஏற்றி வைக்கும் தீபத்தில் என்றும் போல எழுந்தருளி... எங்களைப் பக்குவப்படுத்தி... வரும் கார்த்திகைத் தீபத்திருநாளன்று... 'சர்வேஸ்வரா...! உங்களுடன் மனதாலும், உடலாலும்... கலந்து விடும்... அந்த அருள் பாக்கியத்தை அருளிடுங்கள் சுவாமி...!! என்று பிரார்த்திக்கின்றோம்.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...!!!
ஸாய்ராம்.

No comments:
Post a Comment