முன் பதிவுகளின் தொடர்ச்சி...
( ... இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்'... வலமிருந்து இடமாக (Anti Clock-wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வைப் பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதை உணர்த்துவதற்காகவே...)
( ... 'அவை ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதற்கு ஆதாரமாக 'புராணத்திலும்... கோவிலின் ஆகம விதிகளிலும்' இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன...)
இவற்றிலிருந்து... ஒவ்வொரு ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்ப்பதுதான் 'ராகு-கேது பகவான்களுக்கான' பணி என்பது உறுதியாகிறது. அவை பார்ப்பது... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் தொகுப்பைத்தான்'.
ஒவ்வொரு ஜீவனும்... தனது மொத்தக் கர்மவினைகளான 'சஞ்சித கர்மா' விலிருந்து, இந்தப் பிறவிக்கான 'பிராரப்த கர்மாவை' சுமந்து கொண்டு இந்தப் பிறவியை அடைகிறது. அதை எதிர்கொள்ளும் போது விளையும் விளவுகளை 'ஆகாமிய கர்மாவாக' ஏற்றுக் கொண்டு, இந்தப் பிறவியை கடந்து போகிறது.
இவ்வாறு, தொடர்ந்து... தான் சேர்த்துக் கொள்ளும் 'வினைகளின் விளைவுகளைத்தான்'... அந்த ஜீவனுக்கான 'கர்ம வினைகள்' என்கிறோம்.
இந்த 'கர்ம வினைகளின் தொகுப்பைத்தான்'..'ராகுபகவான்' சுமக்கின்றார்.
இந்தக் 'கர்ம வினைகளிலிருந்து' மீள்வதற்கான உபாயங்களை... 'கேது பகவான்' ஏற்றுக்கொள்கிறார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில்தான்... ஜோதிடச் சித்திரத்தில், 'ராகு பகவானுக்கு' நேரெதிரான... 7 ஆமிடத்தில்... 'கேது பகவான்' அமைகிறார்.
ஒவ்வொரு ஜீவனின் வாழ்வின் நோக்கமும், அது... தனது மூலமான படைப்பினிடத்தில் சென்று சேர்வதுதான். அதற்குத் தடையாக இருப்பது... அந்தந்த ஜீவனின் 'கர்ம வினைகள்தான்'. 'கர்ம வினைகள' களைந்து விட்டால்... ஜீவனுக்கு 'முக்தி' என்ற ' மீண்டும் பிறவாமை' சித்தியாகிவிடும்.
ஒரு ஜீவனின் பிறவிக்கான சூழலை, அதன் கர்ம வினைகள்தான் தீர்மானிக்கின்றன. அந்த வினைச் சூழலுக்கு ஏற்ப பிறக்கும் ஜீவனது வாழ்வை சாட்சியாக இருந்து பார்ப்பது மட்டுமே.... இறைவனின் பணியாக இருக்கிறது. அந்த ஜீவன் எந்த 'கர்ம சூழலில்' பிறந்திருக்கிறது...? என்பதை 'ராகு பகவான்' அந்த ஜாதகத்தில்... எங்கு அமைந்திருக்கிறார்... என்பதைக் கொண்டும், எவ்வாறு, இந்தக் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவது...? என்பதை 'கேது பகவானின்' அமைவைக் கொண்டும்... அறிந்து கொள்ளும் நுட்பத்தைத்தான்... ஜோதிடம் என்ற அரிய கலை கற்றுத்தருகிறது.
இந்த நுட்பத்தைத்தான்... ஒவ்வொரு ஜீவனின் ஜோதிட சித்திரத்திலும்... 'ராகு பகவானும்'... 'கேது பகவானும்'... சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த நுட்பத்தின் வழியாக தொடர்ந்து பயணித்து... ராகு - கேது பகவான்களின் அமைவுகளை... உதாரண ஜாதக அமைவுகளின் மூலம் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment