பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 1.
தனுஷ்கோடி ஸ்ரீ தர்ப்பசயன இராம பிரானின் கருணை
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின், மூத்த சகோதரர் மகளின் திருமணம் தாமதமாகிக் கொண்டு இருந்தது. அவர் தனது நண்பர் ஒருவரிடம் தனது கவலையைப் பகிர்ந்து கொள்ள... அந்த நண்பர், அந்தப் பெண்ணின் ஜாதகத்தை... ஆய்ந்து பார்க்கும்படி சமர்ப்பித்தார்.
அதைக் கணித்துப் பார்க்கும் போது, அந்த ஜாதகரின் திருமணம் பற்றிய நிலைகளை அறிய முடிந்தது. திருமண தாமதத்திற்கான சில காரணங்களையும் அறிய முடிந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தை... திருமணம் அமையக்கூடிய காலமாக அனுமானித்து... அதைப் பதிவும் செய்தோம்.
அந்த ஜாதகத்தில் அமைந்திருந்த சில அமைவுகளின் படி... அவர்களின் பூர்வீகத்திற்கு அருகில் இருக்கும், இராமேஸ்வரம்... தனுஷ்கோடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும்... 'தர்ப்ப சயன ஸ்ரீ இராம பிரானை'... ஒரு அமாவாஸ்யை அன்று குடும்பத்துடன் சென்று சேவித்து... அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும்... தீபத்தில்; சிறிது நெய் சேர்த்து... துளசி... கல்கண்டு... திராட்சை ஆகியவற்றை சமர்ப்பித்து... அஷ்டோத்திர அர்ச்சனை செய்து... ஐந்து முறை வலம் வந்து... அமைதியுடன் அமர்ந்து ஒரு ஆழ்ந்த பிரார்த்தனையை... அவரின் திருவடியில் சமர்ப்பிக்கும் படியான ஆலோசனையை அளித்தோம்.
அவர்களும் குடும்பத்துடன்... அடுத்த அமாஸ்வாயை தினத்தன்று... தனுஷ் கோடி சென்று... 'ஸ்ரீ தர்ப்ப சயன இராமபிரானாரையும்'... 'ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்ரீ லக்ஷ்மண ஸ்ரீ சீதா தேவி தாயார் சமேத உற்சவ ஸ்ரீ இராமபிரானாரையும்' தரிசனம் செய்து... அனைத்து பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்தார்கள்.
தரிசனத்திர்குப் பின்... ஆலய பிரகாரம் வந்த போது... அன்றைய அமாவாஸ்யை தினத்தில்... தர்ப்பணத்திற்காக... பிரார்த்தனைகளுக்காக... பக்தர்களின் கூட்டமும் நிறைந்திருந்தது. அங்கு ஒரு சிறப்புப் பரிகாரத்திற்கென அமைக்கப் பட்ட பந்தலின் கீழ்... தமது பெண்ணின் திருமண தாமதத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு பரிகாரத்திற்காக... சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். அந்த பரிகாரத்தை நடத்தும் ஆலய பட்டாச்சார்யார்... அதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார்.
இதைப் பார்த்ததும்... இந்தக் குடும்பத்தாருக்கும் ஒரு சலனம் ஏற்பட்டது. இது போன்ற ஒரு யாக பரிகாரம் செய்வதற்கான வசதி தங்களுக்கு இருந்ததாலும்... தங்களக்கு ஆலோசனை அளித்தவர்... மிக எளிய முறையில்... ஒரு பக்தி சமர்ப்பணத்தைச் செய்யச் சொன்னாதாலும்... தற்போது, தங்களுக்கு முன் இவ்வாறான ஒரு சிறப்பு யாகம் நடக்கும் போது... அதைக் காணும் தங்களது மகளின் கண்ணோட்டம் எவ்வாறு இருக்கும்... என்பதையும் நினைத்துச் சற்றுக் கலங்கிப் போய் நின்றார்கள்.
பந்தலின் கீழ்... யாகப் பரிகாரம் ஆரம்பித்தது. யாகக் குண்டத்திற்கு முன் அமர்ந்த பட்டாச்சார்யார்... குண்டத்திற்கு அருகில்... அந்தப் பரிகாரத்திற்கான பெண்ணை அமரச் செய்தார். அவருக்கு அருகில் ஒரு ஆசனத்தை இட்டு அதில்... அவருக்குத் துணையாக... அவருடன் சேர்ந்து சங்கல்ப்பம் செய்து கொள்ள... அவர்களுடன் வந்த திருமணமாகாத பெண் ஒருவரை அமருமாறு கேட்டுக் கொண்டார்.
சென்னையைச் சேர்ந்த குடும்பத்தின் பெண்கள் அனைவருமே திருமணமானவர்கள் ஆதலால், அவர்கள் என்ன செய்வது என்று யோசிக்க... இதனையறிந்த பட்டாச்சார்யார்... இதைப் பார்த்துக் கொண்டிருந்த திருச்சி குடும்பத்தினரிடம்... தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லாதிருந்தால்... தங்கள் குடும்பத்தில்... திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண் இருந்தால்... அமரலாம்... என்றார்.
பட்டாசார்யாரின் இந்த அழைப்பைக் கேட்டதும்... திருச்சிக் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். மறுப்பேதும் கூறாமல்... தங்களது பெண்ணை... அந்த துணை ஆசனத்தில் அமர்ச் செய்தனர். யாகம் தொடங்கி... அனைத்து சங்கல்ப்பங்களுடன்... பரிகார ஹோமம் பூரணாமாகியது.
யாகப் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட திருச்சி குடும்பத்தினர்... பட்டாச்சார்யாருக்கும்... பரிகார யாகத்திற்கு மூலக் காரணமாகிய சென்னைக் குடும்பத்தினருக்கும்... தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு... அந்த யாகத்திற்கான செலவில் தாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற தங்களின் நிலையைத் தெரிவித்தபோது... அதை அந்தச் சென்னைக் குடும்பத்தினர்... அன்புடன் மறுத்துவிட்டனர்.
காரணம்... அது அவர்களின் மகளுக்கான பரிகார யாகம். அது பூரணமாவதற்கு... இன்னொரு பெண் தேவையென்ற நிலையில்... தாங்கள் தவித்து நின்ற போது... அந்த ஸ்ரீ இராம பிரானாரே... தங்கள் பெண்ணை அனுப்பி... இந்த யாகத்தைப் பூர்த்தி செய்தார்... என்பதாலேயே.
இந்த அனைத்து இனிய அனுபவங்களுடன்... ஊர் வந்து சேர்ந்தவர்களின் பெண்ணிற்கு... அந்தக் குறிப்பிட்ட காலத்தில்... தகுந்த வரனுடன் திருமணமும்... தொடர்ந்து... இரு பிள்ளைப் பேறுகளும் கிடைத்தன என்றால்... அது... ஸ்ரீ இராம பிரானாரின் கருணையன்றி வேறேது...!
பரிகாரம் என்பது நாம் தேடித் தேடிச் சென்று செய்யும் ஒரு கடினமான நிகழ்வாகிறது. இதற்கு... இதுதான் என்ற பரிகாரமும் நிச்சயமானதல்ல. அதில் பல்வேறு சிக்கல்களும்... முடிச்சுகளும் நிறைந்திருக்கின்றன. ஏனெனில்... அது 'நமது கர்மவினையின் முடிச்சுகளால்'... சூழப்பட்டிருக்கிறது. ஒரு பரிகாரத்தால் நிகழும் நிகழ்வின் முடிவில்... சில ஈடு செய்ய முடியாத இழப்புகளும் ஏற்படுகிறது.
அதுவே... பக்தியின் மூலம் அணுகப்படும் போது... இறைவனின் பேரருள் கருணையினால்... அந்த ஜீவன் தன்மீது கொண்ட ஆழ்ந்த பக்திக்குப் பரிசாக... அந்த இறைவனே... தக்கப் பரிகாரத்தை அளித்துவிடுகிறான். ஜீவன் செய்ய வேண்டியது... அந்த இறைவனின் மீது கொள்ளும் ஆழ்ந்த பக்தி ஒன்றை மட்டும்தான்.
இதைத்தான்... கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ இராமபிரான்... அந்தப் பெண் குழந்தைக்கு அளித்தருளினார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment