ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தில் இருந்தோ அல்லது இராசியில் இருந்தோ, பின்னோக்கி செல்வதை, 'வக்ரம்' என்று அழைக்கிறோம்.
இதன் விளைவுகள், ஜீவர்களின் 'புண்ணிய - பாவங்களை' ஒட்டி நிகழ்கின்றன.
உதாரணமாக, மதிய 1 மணிக்கு அவசியமாக சென்னையில் இருக்க வேண்டிய ஒருவர், மிக அவசரமாக திருச்சியிலிருந்து காலை 6.40 ரயிலுக்கு புறப்படுகிறார்.
ரயில்வே நிலையம் செல்லும் வழியில் ஏற்படும் வாகன நெரிசல், அவரை 6.50 க்கு கொண்டு சேர்க்கிறது. நம்பிக்கை இழந்த நிலையில், நடை மேடைக்கு சென்றவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. இவருக்காகவே காத்திருந்தது போல, இவர் ஏறிய பின், ரயில் 7 மணிக்கு கிளம்பியது.
இந்த ரயிலின் தாமதத்தை போன்றதுதான், வக்கிர நிலையிலிருக்கும் கிரகம் விளைவிக்கும் 'புண்ணிய வினைகள்'.
கிரகங்கள் எப்போதும் நமது 'கர்ம வினைகளின் விளைவுகளைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.
ஸாய்ராம்.