ஒரு ஜீவன், தனது வாழ் நாட்களில் அனுபவித்துக் கடக்க வேண்டிய, 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்', ஜாதகத்தில் அமைந்திருக்கும் 'கிரகங்களின் அமைவுகள்' சுட்டிக் காட்டுகின்றன.
ஆனால், அந்த 'கர்ம வினைப் பயன்களை, அந்த ஜீவன், தனது வாழ்வின். எந்தெந்தக் காலக் கட்டங்களில் கடந்து போகப் போகிறது... என்பதை, 'தசா - புத்தி - அந்தரங்கள் என்ற... கிரகங்களின் தசாக் காலங்கள்தான் நிர்ணயிக்கின்றன.
இந்த சூட்சுமத்தை அறிந்து கொள்வதுதான், ஜாதக ஆய்வின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவனின் வாழ்வு காலமும், 'விம்சோத்திரி தசாக் காலம்' என்ற 120 வருடங்களைக் கொண்டதுதான்,
7 வருடக் காலங்களைக் கொண்ட 'கேது பகவானும்'... 20 வருடங்களைக் கொண்ட 'சுக்கிர பகவானும்'... 6 வருடங்களைக் கொண்ட 'சூரிய பகவானும்'... 10 வருடங்களைக் கொண்ட 'சந்திர பகவானும்'... 7 வருடங்களைக் கொண்ட 'செவ்வாய் பகவானும்'... 18 வருடங்களைக் கொண்ட 'ராகு பகவானும்'... 16 வருடங்களைக் கொண்ட 'குரு பகவானும்'... 19 வருடங்களைக் கொண்ட 'சனி பகவானும்'... 17 வருடங்களைக் கொண்ட 'புத பகவானும்'...இந்த 120 வருட 'விம்சோத்திரி தசாக் காலத்தை' பூர்த்தி செய்கிறார்கள்.
இந்த தொடர் 'விம்சோத்திரி தசாக் காலத்தில்', ஏதாவது ஒரு பகுதியில்தான்... ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப ஒரு பிறப்பு நிகழ்கிறது. அதற்கேற்ப, அந்த ஜீவன் தனது சராசரியான 60 முதல் 80 வயதிற்கான வாழ் நாட்களைக் கடந்து போகிறது.
உதாரணமாக, 20 வருட தசாக் காலத்தைக் கொண்ட... 'சுக்கிர பகவானின்' தசாக்.காலம்தான், மிக நீண்ட தசாக் காலமாகக் காணப்படுகிறது.
ஆதிபத்திய ரீதியாக, 'மகர லக்னத்தை' சேர்ந்தவர்களுக்கு யோகமாகக் கருதப்படும் 'சுக்கிர பகவானின்' தசாக் காலம்... மீன லகனத்தைச்' சேர்ந்தவர்களுக்கு கடினமான காலமாகக் கருதப்படுகிறது.
ஆனால், அவ்வாறாகவே, அவை அந்த அனுபவங்களைக் கொடுத்து விடுவதில்ல. இன்பம் - துன்பம் என்ற 'இரட்டைச் சுழல்கள்' சமமாக நிறைந்த 'கர்ம வினைகளைச்' சுமந்து வந்திருக்கும் ஜீவன்... தனது தசாக் காலங்களிலும், அவை 'யோகமான' காலமாக இருந்தாலும்... அவயோக காலமாக இருந்தாலும்... நன்மை - தீமை என்ற 'புண்ணிய - பாப வினைகளின்' விளைவுகளை சமமாகத்தான் பகிர்ந்தளிக்கின்றன. அதற்கு சாட்சியாகத்தான்... அவைகளின் 'கோள் சார' நிலைகள் அமைகின்றன.
20 வருட, நீண்ட தசாக் காலத்தைக் கொண்ட 'சுக்கிர பகவான்', தனது சுழற்சியை, சராசரியாக 30 நாடகளுக்கு ஒரு முறை நிகழ்த்தி விடுகிறார். ஆகவே, இந்த நீண்ட தசாக் காலத்தை அனுபவிக்கும்... யோகர்களுக்கும்... அவயோகர்களுக்கும்... இந்த 20 வருட 'சுக்கிர பகவான்' தனது, தசாக் காலத்தில், ஏறக் குறைய... 240 முறைகள், 'பெயர்ச்சி' அடைந்து விடுகிறார்.
இந்தப் பெயர்ச்சி காலங்கள்... யோகர்களுக்கும், அவயோகர்களுக்கும்... 'இன்ப-துன்பம்' என்ற 'இரட்டைச் சூழல்களை' அளித்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
அது போலவே,
~ கேது பகவான், தனது தசாக் காலத்தில், ஏறத்தாள 5 முறைகளும்...
~ சூரிய பகவான், ஏறத்தாள 72 முறைகளும்...
~ சந்திர பகவான், ஏறத்தாள 1600 முறைகளும்...
~ செவ்வாய் பகவான் ஏறத்தாள 56 முறைகளும்...
~ ராகு பகவான் ஏறத்தாள 12 முறைகளும்...
~ குரு பகவான் ஏறத்தாள 16 முறைகளும்...
~ சனி பகவான் ஏறத்தாள 7 முறைகளும்...
~ புத பகவான் ஏறத்தாள 204 முறைகளும்...
... தங்களது பெயர்ச்சிகளை அடைந்து, தங்களது தசாக் காலங்களில், ஜீவன் அனுபவித்துக் கடக்க வேண்டிய 'கர்ம வினைகளின் விளைவுகளை'... 'இன்பம் - துன்பம்' என்ற 'புண்ணிய - பாப வினைகளின', சம அளவுக் கலவையாகத்தான் கலந்து அளிக்கின்றன.
ஸாய்ராம்.

நன்றி.
ReplyDelete